
கொடுக்கப்பட்ட மனு

அரசு தரப்பில் பதில் கடிதம்
பள்ளிகளில் அரசு பொது தேர்வின் போது மாணவர்களையும் ,மாணவிகளையும் ஒரே இடத்தில் தேர்வு எழுத செய்வதினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மாணவர்களையும்,மாணவிகளையும் தனி தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் மனு அனுப்பியிருந்தார்.
இது குறித்து அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருந்த கோரிக்கை மனுவில் ......
அரசு பொது தேர்வுகளில் மாணவ மாணவியரை ஒரே இருக்கையில் அமர வைத்து தேர்வுகளை எழுத கடந்த முறை இருந்த அரசு நடைமுறைத்தியது.இவ்வாறு ஒரே இருக்கையில் மாணவ மாணவியரை தேர்வு எழுத வைப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் அவர்களின் தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது மேலும் விரும்பதகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வருத்தமும் கவலையும் அடந்துள்ளனர் குறிப்பாக முஸ்லீம் கோஷா மாணவியர் அதிகமுள்ள எங்களை போன்ற பள்ளிகளில் அதிக அளவில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசுக்கும் மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் எழுத்து பூர்வமாக முறையிட்டும் எந்த தீர்வும் ஏற்படாமல் உள்ளது.
எனவே தாங்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவ ,மாணவியரின் நலனின் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த கோரிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு, நரேஷ் (இணை இயக்குநர் ,அரசு தேர்வுகள் இயக்ககம்) இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அரசின் கடித நகல் மேலே தரப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
இந்த கோரிக்கை குறிந்து நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறோம்.இது வரை நல்ல பதில் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது தான் மாநில கல்வித்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்விதுறைக்கு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கோஷா பெண்களான நமது சகோதரிகள் பாதுகாக்கப்படவேண்டும்
ReplyDeleteநல்ல முயற்சி