Tuesday, March 1, 2011

கீழக்கரையில் சாலை பணிகளுக்கு நீதிமன்ற தடை ஏன் ? கவுன்சிலர் ஜமால் விளக்கம்


கீழக்கரையில் உள்ள அனைத்து வீதிகளிலும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் அனைத்தையும் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது.


இதை நன்கு அறிந்திருந்தும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சிறிதும் கூட பொறுப்பில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்ததாக வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாக அவசர கதியில் போர்க்கள அடிப்படையில் கீழக்கரையில் பல இடங்களில் புதிய சாலைகளை மிகவும் தரமற்ற முறையில் போட்டு வருகின்றனர். குடிநீர் திட்ட பைப்லைன் பதிப்பதற்காக இன்னும் சில தினங்களில் கீழக்கரையில் உள்ள அனைத்து வீதிகளும் சாலைகளும் மிக மோசமாக தோண்டப்படப்போகும் நிலையில் அவசர கதியில் சாலை பணி மேற்கொள்வதை கீழக்கரை மக்கள் நலன் கருதி பரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை எடுத்துக் கோரியும் எந்த பயனும் இல்லாததால் நமது ஊரின் நலன் கருதி மக்கள் பணம் பல கோடிகள் வீண்போய்விடாமல் இருக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


24-02-2011ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த மரியாதைக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் “பொதுமக்களின் நலன் கருதி செயல்படாத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர்க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குடிநீருக்கான பைப்லைன் பதித்த பின்னரே சாலை பணி மேற்கொள்ளப்படும் என்று கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தீர்மானம் ஏற்றிவிட்டு குடிநீர் திட்டத்திற்கான பைப்லைன் பதிக்காமல் அவசர கதியில் சாலை பணி மேற்கொள்வதை உடனே நிறுத்துமாறு” உத்தரவிட்டனர்.


தங்கள் பகுதியில் பைப்லைன் பதிக்காமல் சாலைப் பணி ஏதும் நடந்தால் உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பி உங்கள் புகாரை பதிவு செய்து விடுங்கள், துறை ரீதியான நடவடிக்கை இல்லாத பட்சத்தில் நீதிமன்றங்கள் மூலமாக நாம் ஒரு நிறந்தர தீர்வைக் காண முடியும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.இதைப்போன்று மக்களின் பணத்தை வீணடித்து மக்களுக்கு மிகுந்த சிரமத்தை தரும் செயல்கள் நடந்தேறும் பொழுது நமது வரிப்பணம் நமது நகரின் அத்தியாவசிய அவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன் படாமல் வீணடிக்கப்படுவதை உரிய முறையில் தடுப்பது நமது ஜனநாயகக் கடமையாகும்.

1 comment:

  1. உண்மையை உலகிற்கு உள்ளபடி எடுத்துரைக்கும் கீழக்கரை டைம்ஸ் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
    கீழக்கரை நகராட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை மக்குளுக்கு அம்பலப் படுத்தாமல் இருப்பதற்கு, கிடைக்கும் லாபத்தில் கவுன்சிலர்களுக்கு எல்லாம் பங்கு பிரித்தது போக ஒரு சில பத்திரிக்கை நிருபருக்கும் கணிசமான தொகை கமிசனாக வழங்கப்படுவதாக பேசப்படுகிறது ! நடுநிலை என்பதெல்லாம் நாடகம் என எண்ண தோன்றுகிறது....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.