பைல்(பழைய படம் 2011)
இன்று (24.01.13) கீழக்கரை வருகை தந்திருந்த தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ....
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக மிக மோசமாக சித்தரித்து மனம் புண்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்துள்ள தமிழக அரசிற்கு இஸ்லாமியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சென்ஸார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.இதற்கு சென்ஸார் சான்றிதழ் வழங்கிய குழுவினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்சார் குழுவில் ஒருவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் அவர் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மத்திய அரசை எதிர்த்து பெரும் போராட்டம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
SALAM,
ReplyDeleteமுஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.
கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html