M அப்துல் ரஹ்மான் M.P.
நன்றி:ஹைர உம்மத்- அக்டோபர் - டிசம்பர் 2011
நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.
பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.
தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.
குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.
M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.
குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.
M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
நல்ல கட்டுரை இப்போது நமது ஊருக்கு தேவையான நல்ல கருத்துகளை சுட்டிகாட்டி இருதிர்கள்
ReplyDeleteஇன்ஷா அல்லா நமது ஊரில் உள்ள அனைத்து இயக்கமும் மற்றும் சங்ககளும் ஒன்று சேர்ந்து கலந்து பேசி இதுபோஅப்பாவி நம் சகோதிரிகள் இனி வரும் காலங்களில் பாதிக்க கூடாது . சில நயவஜகர்லின் பிடியில் நம் சகோதிரிகள் போகாமல் நாம் தான் விழிப்புனர்வு ஊர் மக்களுக்கு கொடுக்க வேண்டும் ! இதில் ரெம்ப வருத்த பட வேண்டிய விசையம் என்ன வென்றால் தட்டி கேட்க வேண்டிய நம் சகோதர்களே கண்டும் காணாமலும் இருகிறார்கள் ! பிரச்னை பெரியதாக போன உடன்
கூட்டம் கூட்டமாய் பேசி நம் சமுகத்தை நாமே அசிங்கக படுத்துகிறோம் , வெந்து போய் இருக்கும் தாய் தந்தை மனதை புண்படும் அளவிற்கு பேசுகிறோம் , அது நாளை நம் வீட்டிலும் நடக்க வாய்ப்பு உள்ளது , அதனால் எல்லோரும் விளிப்புனருடன் இருங்கள் இன்ஷா அல்லா இது போன்று சம்பவம் நம் ஊரில் நடக்கவே கூடாது என்று அல்லாவிடம் துவா செய்வோம் . விளிப்புனருடனும்
இருப்போம் .தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளத்து ஆள் ஆக்குவது அனைத்து தாய் தந்தைகளின் கடமை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteநல்ல கருத்து. பாராட்டுக்கள்.
கல்லூரி படிப்பிற்கு முன்பாக மார்க்க கல்வியினை கற்க அனுப்புவது மிக மிக நல்லது. இறையச்சம் என்றால் என்ன? ஸஹாபா பெண்மணிகள் கற்ற பாடம் என்ன? அவர்களுடைய அழகிய பெயர்களை மட்டும் சூட்டுவதால் பெருமை அல்ல, அவர்களின் அளப்பெரிய பண்புளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய சிந்தனையை பாலர் பாடத்திலிருந்தே ஊட்டி வர வேண்டும்.
எல்லா நம் சமுதாய பெண்களை இச்சீரழிவு கலாச்சாரத்திலிருந்து காப்பாற்றட்டும். நல்லருள் புரியட்டும் இன்ஷா அல்லாஹ்
சகோதரன்
கீழை ஜமீல்
தமிழ்ல நான் எழுதுனதுல்ல காலேஜ் தேட் யியர் பன்றேன் .சில வருஷத்துக்கு முன்னாடி என்னோடோ ரிலேட்டிவ்க்கு நடந்த விசயத்தை நீங்க எல்லோரும் தெரிஞ்சுக்குரனும். +2 படிச்சிட்டிருந்த என்னோட ரிலேட்டிவ் கேல் வீட்ல 7 வருசமா டிரைவரா இருந்தான் ஒருத்தன்.அவன வீட்ல புள்ளை மாதிரி பாத்திகிட்டக்ஙக அவனோடதான் இந்த கேல் ஸ்கூலுக்கு போவா அவல நல்லா கவனிச்சிக்கிருவானாம் அப்டியே அவனோட லவ் ஆயிடுச்சி பப்ளிக் எக்சாமுக்கு சில நாள் முன்னாடி ஓடி போய் நாம் கல்யாணம் பன்னிக்குருவோம் இல்லாட்டி நான் செத்துருவேன்டு என்று சொல்லிக்கிறான் இதை நம்பி இவலும் நகை பணத்தோட வீட்டை விட்டு வெளியேறிட்டா மிட்நைட்ல ஆட்டோவுல பொனதாலே செக்போஸ்ட்ல போலிஸ் கேட்ச் பன்னிடாங்க வீட்லயும் இன்பார்ம் பன்னி அவல வீட்ல விட்டுடாங்க.விசாரிச்சதுல அவன் முன்னாடியெ கல்யாணம் ஆயி 2 பிள்ளைவோ இரிக்கிதாம் நகை பணத்துகாஹ கூட்டி போனானாம்.இது மாதிரி ஏற்கெனவ ஒரு புல்லையை ஏமாதிக்கிரானாம் .எங்க குடும்பத்துல எல்லாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சி அவலுக்கு இப்ப வரைக்கு கல்யாணம் ஆவலே அவ லாத்தாக்கு இதுனாலெ மாப்பிலை கிடைக்கலே. இந்த கவலையிலேய் உம்மாவும் மொவுத் ஆயிட்டாஹ. ஆட்டோ வேண்ல போற புள்ளைங்க டிரைவர்ட பேசாதீங்க.முடிஞ்சவரைக்கும் ஸ்கூல் காலேஜ் பஸ்ல வாங்க. நம்ம வாப்ப உம்மாக்கு துரோகம் செய்யாதியா
ReplyDeleteதன் குடும்பத்தை அவர் அவர் கவனித்தால் இந்த பிரட்சினைக்கு முற்று வைக்கலாம் ஆனால் பிற நாட்டில் வேலை நிமிர்த்தமாக ஆண்கள் செல்வதால் இந்த பிரச்சினை எற்படுகிறது வீட்டுக்கு ஓர் ஆண் ஊரில் இருந்தால் இந்த மாதிரி நடக்காமல் பார்த்து கொள்ளலாம்
ReplyDeleteநமது ஊரில், நம் சமூக பெண்களை ஆசைவார்த்தை காட்டியோ அல்லது வேறுவழியிலோ அவர்களை தவறான பாதையில் கொண்டுசெல்வது, மற்றும் வீட்டை விட்டு வெளியே வர செய்வதில் மற்ற சமூக இளைஞர்கள்தான் அதிகம் பங்கு வகிக்கிறார்கள். இது போல ஒரு விசயம் நடப்பது அந்த இடத்தை சேர்ந்த அக்கம் பக்கம் இருக்கும் நம் சமூக இளைஞர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அதை தட்டி கேக்க முடியவில்லை. ஏன்? ஏதோ ஒரு வழியில் இவர்களும் அதே தவறை செய்து கொண்டு இருப்பார்கள். பெற்றொர்கள் பெண்பிள்ளையை மட்டும் கண்கானிப்பது போதாது. ஆண்பிள்ளைகளையும் கண்கானிக்க வேணும்.
ReplyDeleteநம் ஊரை சேர்ந்த இளைஞர்கள் முதலில் இதுபோன்ற செயல்களில் இருந்து வெளியே வரவேண்டும். அப்பொழுதுதான் பெண்களை இதுபோன்ற விசயத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
முபாரக், ஜித்தா
GOOD THOUGHT!..
ReplyDelete‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்...
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
கண்ணாடி பெண்ணே !!!
ReplyDeleteபெண்ணே நீ ஒரு கண்ணாடி போன்றவள்
உன்னை பார்பதற்கு தனைத்தானே அழகு படுத்தி கொள்வார்கள் ஆண்கள் !!
உன்னுடைய இதயத்தில் கண்ணாடியின் ஓரத்தை போல்
மிக கூர்மையான இமான் இருக்கிறது ,
அதே பகுதுயில் கண்ணாடி போல்
சுக்கு நூறாக உடையும் இமான் இருக்கிறது .......
இன்றைய காலத்தில் எந்தே இமனை
எடுத்து கொண்டாய் பெண்ணே.. ????
தினம் தினம் கேள்வி படுகின்றேன்
ஓடுகின்றாய்.... யாரோடு ? ஏதற்காக ? எதை கொண்டு ....பெண்ணே ??
உனக்காக சுடும் மணலிலும், குத்தும் பனிலும்
பளையில் உன்னை வாழவை பதற்காக உழைகின்றோம் !!!!
நீயோ !!!
சமுதாயத்தை கறைபட வைக்கின்றாய்
வடு பட வைக்கின்றாய் !!!
உன் இளமையையும் , வாழ்கையையும்
சீரழிக்க துடிக்கும் காவியோடு ஓடுகின்றாய்
பல்லி அறையில் கணவனோடு படிக்க ஆசை படாமல்
காவி அறையில் படிக்க ஆசை படுகின்றாய் !!!!
நீ சுகமாக வாழ தான் ரத்தத்தை வேர்வையாக
சிந்திய செல்வதை எடுத்து கொண்டு காவியோடு அனுபவிகின்றாய் !!!
இது என்ன நீதி பெண்ணே ??
இது என்ன நியாயம் பெண்ணே ??
இங்கு உன்னை பத்திய சிந்தனை இல்லாமல்
நாளையை பத்தி சிந்தித்தால் வந்த வினையோ ???
தெரிய வில்லையே பெண்ணே !!!!!
இன்றைய உன் நிலைக்கு நாகளும்
ஒரு காரணம் பெண்ணே !!!
நாளை வாழ்வதற்காக இன்றை துளைத்தால்
வந்த வலியோ ?? ...... தெரிந்து விட்டது பெண்ணே!!!
வருகின்றோம் பெண்மையை காப்பதுவதற்காக
சமுதாயத்தை துக்கி பிடிபதற்காக ......தாய் நாட்டை நோக்கி !!!!!
அஸ்ஸலாமு அழைக்கும்,
ReplyDeleteDear Sir,
நல்ல கருத்துகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி!!!
நமது கருத்துகளை பதிவு செய்தல் மட்டும் போதாது நம் மக்கள் அனைவர்க்கும் நாம் தான் விழிப்புனர்வு கொடுக்க வேண்டும்...
வல்ல இறைவன் நம் அனைவரின் குடும்பங்களுக்கு நல்லருள் புரிந்து தீயவர்களின் எண்ணம், செயல்களில் இருந்து நம் அனைவரையும் பாதுகபனாக ஆமின்,,,
அஸ்ஸலாமு அழைக்கும்,
ReplyDeleteDear Sir,
நல்ல கருத்துகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி!!!
நமது கருத்துகளை பதிவு செய்தல் மட்டும் போதாது நம் மக்கள் அனைவர்க்கும் நாம் தான் விழிப்புனர்வு கொடுக்க வேண்டும்...
வல்ல இறைவன் நம் அனைவரின் குடும்பங்களுக்கு நல்லருள் புரிந்து தீயவர்களின் எண்ணம், செயல்களில் இருந்து நம் அனைவரையும் பாதுகபனாக ஆமின்,,,
கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லீமும் அல்லஹ்வின் கட்டளையான ஐந்து வேளை தொழுகையை கடைபிடித்தல் அவசியம் ஏனெனில் தொழுகை நம்மை எல்லா வகை அசிங்கத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
ReplyDeleteநாளுக்கு நாள் இது போன்ற விஷயங்கள் அதிகமாக நம் காதுகளில் விழுவதும் , தற்போது நம் ஊரிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது .....
ReplyDeleteநான் சில கேள்விகளை இங்கே கேட்க விரும்புகின்றேன் (atleast கிழக்கரையில் ....
இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இதுவரை எந்த ஜாமதோ அல்லது எந்த ஒரு குழுவோ ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறதா?
காலேஜ் படிக்கும் பருவ வயது மாணவர்கள் தெருக்களில் குடி இருக்கிறார்கள், அரை கால் ஆடையுடன் தெருக்களில் உலாவுகிறார்கள் இதற்கு ஏன் யாரும் இன்னும் தடை போட வில்லை ?
தனது பெண் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் ஆட்டோக்களில் , திரைப்பட பாடல்கள் ஏன்? காதல் உணர்வை தூண்டுவதற்க?
ஆட்டோ டிரைவரிடம் திரைக்கு அப்பால் இருந்து உரையாடி கொண்டு பெண்குழந்தைகள் சென்று கொண்டிருக்கிறார்கள், இதற்கு என்ன நடவடிக்கை?
ஆட்டோ டிரைவர் ஒவ்வொரு பெண்ணாக அவர்கள் வீட்டில் இறக்கி விடும்போது , கடைசியில் இறக்கி விடப்போகும் பெண் வீடு வரும் வரை இருவரும் தனியாக பயணிக்கிறார்கள் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை
பள்ளி அல்லது கல்லூரி படிக்கும் பெண்ணிற்கு செல் போன் எதற்கு?
மணல் மேடு என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் கலக்க வைத்து ஜமாத்துக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன .... கேட்டால் தங்கள் பெண்களை அது போன்ற இடத்திற்கு அனுப்பாமல் நாம் தான் பார்க்கணும் என்கிறார்கள் ..... அப்படி என்றால் மற்ற பெண்களின் நிலை ? அதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?
சிறார்களின் கைகளில் செல் போன்களும் , ipod களும். இவை எல்லாம் எதற்கு?
ஓடிப்போகும் பெண்களுக்கோ அல்லது மனம் முடித்த கணவனை கழற்றி விடிவதற்கு அவன் மீது இல்லாததை கூறி இறுதியில் தன் முன்னாள் காதலனுடன் ஓடிப்போன பெண்களை என்ன செய்துள்ளனர் ?
நம் ஊரில் எத்தனையோ பண முதலைகள் இருந்தும் நமது சமுதாயம் இப்படி சீரழிந்து கொண்டிருக்கிறதை கண்டும் காணாமலும் இருப்பதை பார்த்து பாமரனாகிய என்னை போன்றவர்கள் வருந்த மட்டும் தான் செய்ய முடிகிறது.......
நம் சமுதாயத்தை இது போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்ற எனக்கு தெரிந்த சில கருத்துக்கள்:
தெரு வாரியாக ஜமாத்தின் கண் காணிப்பில் ஒரு குழு அமைத்து இது போன்ற அனச்சரங்களை தடை செய்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டு செயல் படுத்தவேண்டும்.
ஆட்டோக்களுக்கு பதிலாக வேன்களை அறிமுகப்படுத்த வேண்டும், வேன்களில் பெண்மூதடியர்களை பருவப்பெண்களோடு அனுப்ப வேண்டும் .
ஓடிப்போகும் ஆண்களுக்கும் ,பெண்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
ஆண்களை பெண்களோடு கலக்க வைக்கும் மணல் மேடு போன்ற அனாச்சாரங்களை உடனே தடை செய்ய வேண்டும்.
காலேஜ் படிக்கும் மாணவர்கள் ஊருக்குள் உலாவ தடை செய்ய வேண்டும்.
சிறுவர்கள், பருவ பெண்களில் கைகளில் செல் போன், ஆடியோ வீடியோ கேட்கும் மற்றும் பார்க்கும் சாதனங்களை கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
இப்படிக்கு சகோதரன் முஜீப் ரஹ்மான்,
வடக்குத்தெரு, கிழக்கரை.
காலமறிந்து விடுத்த அருமையான கட்டுரை. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நம் ஊர் போன்ற ஏனைய ஊர்களுக்கும் இந்த கட்டுரை கற்பிக்க பட வேண்டும். சின்ன திரையில் மூழ்கி கிடக்கும் நம் பெண்களில் அறியாமையை போக்க அவ்வப்போது அனேக இயக்கங்கள் தெரு முனை பிரச்சாரம் நடத்தி விழிப்பூட்டி வருகின்றன. நேற்றும் (11.11.2012) எங்கள் வடக்கு தெருவில் ரேஷன் கடை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, குறிப்பிட்ட பிரச்னை, தீர்வு சம்பந்தமாக அழகான செய்திகள் எடுத்து வைக்கப்பட்டன. இது போன்ற தொடர் பிரச்சாரங்கள் அல்லாஹ்வின் பேரருளால் சமுதாய சீரழிவுக்கு முற்று புள்ளியிடும் என்று நம்புவோம்.
ReplyDelete