மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை துவக்க வலியுறுத்தி, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன் தலைமை வகித்தார். மதுரையிலிருந்து துபாய்க்கு வருகை தந்திருந்த முன்னாள் எம்.பி., ராம்பாபு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் பிரபாகரன், , டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா , மற்றும் அமீரக ஏர் இந்தியா அமீரக மேலாளர் ராம்பாபு ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இடிஏ மெல்கோ செயல் இயக்குநர் அஹமது மீரான் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹுதீன் பேசியதாவது,
மதுரையிலிருந்து வளைகுடாவிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் தென்மாவட்டங்களின் தொழில் வளம் பெருகும்.மேலும் வளைகுடாவிலிருந்து சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அதிகளவில் வருகிறார்கள்.இவர்கள் மதுரைக்கு வருவது அதிகரிக்கும்.மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வாகனங்களில் எவ்வித நெரிசலும் இல்லாமல் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் உள்ளன.இது மற்ற விமான நிலையங்களில் இல்லாத வசதியாகும்.இதற்காக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து ஆதரவையும் தர தயார் என்றதோடு தொடர்ந்து நேரடி விமானத்தின் வசதியை வலியுறுத்தி பேசினார்.
மதுரையின் முன்னாள் எம்.பி., ராம்பாபு.எம்.பி. பேசியதாவது,
துபாயிலிருந்து ஒரு 40இன்ச் டிவி வாங்கி மதுரை சென்றாலே நாம வந்து சென்ற டிக்கெட் கட்டணத் தொகையை லாபமாக பெறலாம் என்கின்ற அளவுக்கு எல்க்ட்ரானிக் பொருள்களின் விலை உள்ளது.துபாய் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற நகரமாக உள்ளது.நேரடி விமானம் போக்குவரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இக்கோரிக்கைகள் குறித்து விமான போக்குவரத்துதுறை அமைச்சரிடம் வலியுறுத்தி விரைவில் துவங்க ஏற்பாடு செய்வோம் என்றார்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பேசியதாவது,
மதுரை துபை விமான சேவைக்கு இடிஏ குழுமம் நிர்வாக இயக்குநர் ஸலாஹுத்தீன் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்காகவும், நேரடி விமானத்திற்கு இங்கே(துபாய்) கிடைக்கும் தமிழர்களிடத்திலே கிடைக்கும் ஆதரவை கண்டும் மிகவும் மகழ்ச்சியடைந் தோம். 2012 ஜன.முதல் ஜூன் வரை 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.துபாய் தொழில் வர்த்தக சங்கத்தில், இந்திய
நிறுவனங்களை சேர்ந்தவர்கள் 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அச்சங்கத்துடன் தகவல் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள், மதுரையில் தொழில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. மதுரையில் சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலா அதிகரித்துள்ளது.தென் மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர், அரபு நாடுகளுக்குச் சென்றுவருகின்றனர். தற்போது, திருச்சி அல்லது சென்னை வழியாகவே பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, திருச்சியிலிருந்து துபாய், ஷார்ஜா, அபுதாபி, மஸ்கட், பகரைன், தோகா உட்பட 13 சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டுள்ளது. மதுரையில் இருந்தும் துவங்க வேண்டும்.மதுரை துபாய் நேரடி விமானம் வந்தால் ஷாப்பிங் செய்ய மக்கள் துபாய்க்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்.வர்த்தக ரீதியாக மதுரை துபாய் வெற்றிகரமாக நடைபெறும் மேலும் மத்திய அரசாங்கம் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்.கோடைகால சீசனான மார்ச் 29க்குள் இதற்கான அறிவிப்பு வெளிவர வேண்டும். என்றார்.
அமீரக ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராம்பாபு தனது ஏற்புரையில்,
இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் பயனுள்ளது.இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி நிச்சயம் இவ் வழித்தடம் லாபகரமாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை .இதற்கு மேல் எந்த ஒரு புள்ளி விபரமும் தேவைப்படாது. இங்கு விவாதிக்கப்பட்ட விசயங்களை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எடுத்து செல்வேன்.வெகு விரை இதற்கான நல்ல அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாண்டியன் ஹோட்டல் இயக்குநர் முனைவர் வாசுதேவன் , மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை சம்பந்தமான சந்தை ஆய்வை ஒளி-ஒலிக்காட்சி மூலம் விளக்கினார்.
மதுரையிலிருந்து தொழில் வர்த்தக சங்கம், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், டிராவல்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் துபாய் அமீரக தமிழ் மன்றம் சார்பில் அமுதரசன்,அமீரக தமிழ் அமைப்பு சார்பில் அஹமது மைதீன்,காயிதேமில்லத்பேரவை ஹபீபுல்லா, வாணலை வளர் தமிழ் மன்றம் கீழை ராஸா,ஈமான் சார்பில் ஹமீது யாசின்,துபை தமிழ்ச் சங்கம் ஜெகந்நாதன்,கீழக்கரை கிளாஸிபைட் எஸ்கேவி,கீழக்கரை நாசா சங்கத்தின் சார்பில் ஜெயினுலாப்தீன்,வஜிவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவணசமுத்திரம் முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார்.
கீழக்கரை ஹமீது ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிஏ நிறுவனத்தின் சார்பில் தலைமை அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் S.S. மீரான் செய்திருந்தார்.
மதுரையிலிருந்து வளைகுடாவிற்குநேரடி விமானம் அமைவதற்காக முயற்சி செய்து அனைவருக்கும்,நேரடி விமானம் அவசியம் என வலியுறுத்துறுவதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற கீழக்கரை நாஸா அமைப்பின் நிர்வாகிகளான ஜெயினுலாப்தீன் அவர்கள்,வஜிவுதீன் அவர்கள்,கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின் அவர்கள்,காயியேமில்ல பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான் அவர்கள் உள்ளிட்டோருக்கு கீழக்கரை கிளாசிபைட் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteமதுரையிலிருந்து வளைகுடாவிற்குநேரடி விமானம் அமைவதற்காக முயற்சி செய்து அனைவருக்கும்,நேரடி விமானம் அவசியம் என வலியுறுத்துறுவதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற கீழக்கரை நாஸா அமைப்பின் நிர்வாகிகளான ஜெயினுலாப்தீன் அவர்கள்,வஜிவுதீன் அவர்கள்,கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின் அவர்கள்,காயியேமில்ல பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான் அவர்கள் உள்ளிட்டோருக்கு கீழக்கரை கிளாசிபைட் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteமதுரையிலிருந்து வளைகுடாவிற்குநேரடி விமானம் அமைவதற்காக முயற்சி செய்து அனைவருக்கும்,நேரடி விமானம் அவசியம் என வலியுறுத்துறுவதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற கீழக்கரை நாஸா அமைப்பின் நிர்வாகிகளான ஜெயினுலாப்தீன் அவர்கள்,வஜிவுதீன் அவர்கள்,கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின் அவர்கள்,காயியேமில்ல பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான் அவர்கள் உள்ளிட்டோருக்கு கீழக்கரை கிளாசிபைட் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteநல் வாழ்த்துகள் கூறும் அதே வேளையில் வல்ல இறைவனிடத்தில் தங்களின் மேலான முயற்சிகள் அனைத்தும் எளிதில் வெற்றி காண பிரார்த்திக்கின்றோம்.
ReplyDeleteநல் வாழ்த்துகள் கூறும் அதே வேளையில் வல்ல இறைவனிடத்தில் தங்களின் மேலான முயற்சிகள் அனைத்தும் எளிதில் வெற்றி காண பிரார்த்திக்கின்றோம்.
ReplyDelete