Friday, March 16, 2012

உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் !கீழக்கரையில் அதிகாரி தகவல்!


திருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கூறினார்

கீழக்கரை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்களின் சட்டம் 2006 பற்றிய வணிகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.

கீழக்கரை வர்த்தக் சங்க தலைவர் அகமது சகாப்தீன் தலைமை வகித்தார்.செயலாளர் சுப்பிரமணியன்,பொருளாளர் சந்தான கிருஸ்னன், முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் ,

திருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட சிறுவியாபாரிகள், மீன்கடை வியாபாரிகள்,சாலையோர வியாபாரிகள்,தள்ளுவண்டி வியாபாரம் செய்வோர்,தெருக்களில் கூவி விற்கும் வியாபாரிகள் அனைவரும் தங்களின் வியாபாரத்தை அரசிடம் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.

மேலும் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பால்விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள்,டீக்கடை,ஹோட்டல்,மளிகைடை,பெரிய வணிக நிறுவனங்கள்,குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்வதுடன் உரிமம் பெற வேண்டும்.

மேலும் குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தயாரிக்கும் தேதி,காலவதியாகும் தேதி ஆகியவை தயாரிப்பு பொருள்கள் மீது இருத்தல் வேண்டும்.கடைகளில் கால‌வ‌தியான‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்தால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கைப்ப‌டும்.

வியாபாரிக‌ள் தங்க‌ள் வியாபார‌த்தை ப‌திவு செய்வ‌த‌ற்கு ராம‌நாத‌புர‌ம் க‌ருவூல‌த்தில் ரு100 விண்ண‌ப்ப‌த்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3ம், குடும்ப‌ அட்டை ம‌ற்றும் வாக்காள‌ர் அடையாள‌ அட்டை ந‌க‌லுட‌ன் விண்ணப்பம் 'ஏ'யை நிர‌ப்பி திருப்புல்லாணி ஒன்றிய‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.

உரிம‌ம் பெறுவ‌த‌ற்கு இவ‌ற்றுட‌ன் விண்ண‌ப்ப‌ம் 'பி'யையும் இணைத்து ராம‌நாதபுர‌ம் க‌லெக்ட‌ர் அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ உண‌வு க‌ல‌ப்ப‌ட‌ப்பிரிவில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும். சோத‌னையின் போது உரிம‌ம் இல்லை என்றால் ரூ1ல‌ட்ச‌ம் வ‌ரை அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌டும் இவ்வாறு அவ‌ர் பேசினார்.

3 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் (வ ரஹ்) செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது . M .சுல்தான் இப்ராகிம் .மக்காஹ்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் (வ ரஹ்) செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது . M .சுல்தான் இப்ராகிம் .மக்காஹ்

    ReplyDelete
  3. மங்காத்தவின் தங்கச்சி மகன்March 17, 2012 at 9:32 PM

    பனிரெண்டு இலட்சத்திற்கும் அதிகமான வருட வருமானம் உள்ள வியாபாரிகளா? அல்லது ப்ன்ரெண்டு இலட்சத்திற்கும் அதிகமான விற்றுமுதல் ( ANNUAL SALES TURNOVER)செய்யக்கூடிய வியாபாரிகள் அரசிடம் பதிவு செய்ய வேண்டுமா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.