Monday, June 11, 2012
100க்கும்மேற்பட்ட மாணவர்களுக்கு நாசா அமைப்பின் கோடைகால பயிற்சி முகாம்!
கீழக்கரை வடக்குதெரு நாஸா சமூக நல அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க வழியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள்,குர்ஆன் ஓதுவது,ஹதீஸ்களின் விளக்கம்,உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் உள்ளடங்கிய கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் கடந்த 08/05/2012 முதல் 24/05/2012 வரை 15 நாட்கள் நடைபெற்றது.இவ்வகுப்பில் 108 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மாணவர்களுடைய வயது வரம்புகளின் அடிப்படையில் மூன்று வகுப்பறைகளாக
பிரிக்கப்பட்டு தினசரி மூன்று வகுப்புகள் காலை 10:30 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை இடையே 10 நிமிட இடைவெளியுடன் நடத்தப்பட்டது.
தினமும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.மின்சார தடையில்லாமல் மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஜெனரெட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.இப்பயிற்சியின் இறுதியில் கிராத் ஓதுதல் மற்றும் மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த கேள்வி- பதில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலுமிருந்து முறையாக வருகைபதிவு பெற்ற மாணவர்கள், இறுதி தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆகியோருக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு பரிசுகளும் சிறப்பாக வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அணைத்து மாணவர்களுக்கும் சான்றிதல் மற்றும் நினைவு பரிசாக இஸ்லாமிய புத்தகம் "அன்றாட வாழ்வில் 1000 சுன்னத்துக்கள்" வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய உதவிய அனைவருக்கும் நாஸா சமூக நல அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது,
எவ்வித கட்டணமும் இல்லாமல் கோடைகால பயிற்சி வகுப்பு எங்களின் பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்நிகழ்ச்சியை நடத்திய நாஸா அமைப்பினருக்கு எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.அடுத்த முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
மாஷா அல்லா நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நாசா.
ReplyDeleteஇது போல் கீழக்கரை TNTJ பல வருடங்களாக நடத்துகின்றார்கள். அதை பற்றி ஏன் நீங்கள் செய்தி வெளி இடுவதில்லை
ReplyDeleteஇது போல் கீழக்கரை TNTJ பல வருடங்களாக நடத்துகின்றார்கள். அதை பற்றி ஏன் நீங்கள் செய்தி வெளி இடுவதில்லை
ReplyDeleteசெய்தி அனுப்பி தாருங்கள் !நிச்சயம் வெளியிடுவோம்
ReplyDeletekeelakaraitimes@yahoo.com