கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில், கள்ளநோட்டுகளை செலுத்தியது தொடர்பாக, ஏர்வாடி ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமிலை, போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது...
பாரத ஸ்டேட் வங்கிக்கு, நேற்று மதியம் 1 மணிக்கு, ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமில், 28, வந்தார். அவரது சகோதரர் கணக்கில் வரவு வைக்க செலுத்திய 4,500 ரூபாயில், மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. வங்கி மேலாளர், போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஏர்வாடி செய்யது முகம்மது அல்தாப் என்பவரிடம் பணம் வாங்கியதாக, முகம்மது ஜமில் தெரிவித்தார். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2010 ஜூலை 28 ல், ராமநாதபுரத்தில் 6 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் அல்தாப் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகம்மது ஜமில் சிக்கியதை அறிந்து, அல்தாப் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.