Thursday, June 14, 2012

சாக்கடையில் சின்னக்கடைதெரு சாலை!அப்பகுதி மக்கள் கவலை !நடவடிக்கைக்கு கோரிக்கை !


படம்:-பிக்ருல் ஆகிர்

பட விளக்கம்;கழிவு நீர் கால்வாய் உடைந்ததால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதை காணலாம்.

கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கு பழைய சாலை உடைத்து அகறும் போது கழிவுநீர் வாய்காலையும் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சாலையோர‌ பள்ளம் தோண்டி சாக்கடை நீர் ஓடுவதற்கு வழி ஏற்படுத்தினர் ஆனால் கழிவு நீர் அப்பகுதியிலேயே நிற்பதால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்ற்னர்.

இது குறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

ஒரு மாதத்திற்கு முன் சின்னகடை தெருவில் சலை அமைக்கும் போது வாய்காலை உடைத்து சென்று விட்டனர்.இதனால் சாக்கடை நீர் ரோடு பகுதியில் ஓடி கொண்டிருக்கிறது. இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் இது வரை நடவடிக்கை இல்லை .மேலும் கழிவு நீர் ஓடுவதற்கென்று சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டியிருப்பதால் வீடுகளில்லுள்ளோர் அதை கடந்து செல்வது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் இதனால் 100க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவுநீர் கால்வாயை ச‌ரி செய்து த‌ர‌ வேண்டும் என்றார்.

3 comments:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 15, 2012 at 7:37 PM

  தயவு கூர்ந்து எல்லோரும் ஒரே ஒரு முறை மட்டும் ஜோராக கை தட்டுங்கள். தேசீய கடசியின் நகர் தலைவரின் புலம்பலை கேட்டு.

  நடநது முடிந்த உள்ளாட்சி தேர்தலின் பிரதான பிரச்சாரமே நகரின் சுகாதாரத்தை மையமாக வைத்துதான் என்பதை யாவ்ரும் அறிவர். கடந்த சுமார் 8 மாத காலமாக வாருகால் பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

  தேர்தலுக்கு பின் (?) சொகுசு காரில் வலம் வரும் நகரின் முதல் குடிமகள் முதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் தத்தம் மனசாட்சிக்கு பணிந்து அவரவர் வழிபடும் இறைவனின் பெயரால் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அனுபவித்த சுகங்கள் உட்பட.

  மக்களே நாம் முழுமையாக முட்டாளாக்க பட்டு விட்டோம். விதிக்கப்பட்டது இதுதான் என சபூர் செய்து கொள்வோமாக!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 15, 2012 at 8:01 PM

  எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேணடும்.

  மக்களின் வ்ரிப்பணத்திலிருந்து வ்ருடாவருடம் சட்ட மன்ற, பாராளூமன்ற தொகுதிகளுக்கு சில கோடிகள் ஒதுக்கப் படுகிறதாமே? உண்மையாங்க மக்களே!!!!! நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பார்கள் மூத்த மக்கள்.இருப்பினும்.......

  அந்த ஒதுக்கீட்டிலிருந்து ஏதாவது நிதி கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட்டிருக்கிறதா? நகரின் தேசீய, மாநில கட்சிகளின் அமைப்புகளும், பொது தொண்டு அமைப்புகளும் என்ன செய்து கொண்டு இருக்கின்றன?கூலிக்கு மாரடிக்க ஓட்டு கேட்பதும், வசூல் பிரிப்பதுதான் அவர்களின் தலையாய பணியா? தயவு செய்து அடையாளங்களை தொலைத்து விடாதீர்கள். ஒட்டு போட்ட மககளின், படைத்தவனின் கொடிய சாபத்திற்கு ஆளாகதீர்கள்.

  ReplyDelete
 3. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 15, 2012 at 8:49 PM

  நேற்று கூட நகர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பினர் ஏழை எளிய மாணவச் செல்வங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வீதிகளில் வசூல் செய்து கொண்டிருந்தார்கள். பாராட்டுக்கள். அவர்களுக்கு இந்த இனியவர்களின் பணிவான வேண்டுகோள்.

  பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த் முஸ்லீம் மாணவ செல்வங்களுக்கு மத்திய அரசால் மொவ்லான அபுல் கலாம் ஆசாத் பெயரால் பதினென்று மட்டும் பன்ரெண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு முறையேஆராயிரம், ப்னிரெண்டாயிரம் கல்வி உதவித் தொகையாக வ்ருடந்தோறும் வழங்கப்படுகிற்து. இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் சுய முயற்சியாக முயல்வது குதிரை கொம்பான விஷயம். ஆகவே இது விஷயத்தில் அவர்களோடு நீங்கள் ஒத்துழைக்கலாமே.

  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் மூஸ்லீம் ஏழை பெண்(மட்டும்)மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற பிரகாசமான வாய்ப்புண்டு.

  வெகுசில வருடங்களுக்கு முன் ஈரோட்டில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் கல்வி உதவித் தொகை சம்பந்தமாக ஒரு நூல் கூட வெளியிட்டார்கள்.

  தனி மனித முயற்சியை விட அமைப்பு களுக்கு சாத்திய கூறுகள் அதிகம் என்பதே எந்தனின் தாழ்மையான் கருத்து. அதனால்தான் உங்களிடம் பொறுப்பு சாட்டுகிறோம். படைத்த ரஹ்மான் அதற்குண்டான நிரப்பமான நற்கூலியை உங்களுக்கு நிச்சயமாக வழங்குவான். ஆமீன் ஆமீன் யார்ப்பில் ஆல்மீன்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.