Saturday, January 19, 2013

கீழ‌க்க‌ரையில் இந்திய‌‍ -அமெரிக்கா ரோட்ட‌ரி ச‌ங்க‌ங்க‌ள் இணைந்து க‌ல்வி க‌லந்து க‌ல‌ந்துரையாட‌ல்!


இந்திய & அமெரிக்க ரோட்டரி சங்கங்கள் சார்பில், கூட்டுபடிப்பு மூலம் கல்வி பரிமாற்றம் பற்றிய கலந்துரையாடல் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளின் சேர்மன் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.

 கல்லூரி செயலாளர் யூசுப்சாகிப், இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வர் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.

இதில் அமெரிக்க வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர் மோனிகா குட்டியர்ஸ் தலை மையில் 5பேர் குழுவானது, கூட்டுபடிப்பு மூலம் கல்வி பரிமாற்றம் பற்றிய முறையினை கல்லு�ரி யில் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் பேராசிரியர்கள், மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை கூறியது.

கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத், செயலாளர் சுப்ரமணியன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் சண்முகராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.