Saturday, June 16, 2012
வாடகை பாக்கி !கடைகளுக்கு சீல்!கீழக்கரை நகராட்சி அதிரடி!
கமிஷனர் முஜிபுர் ரஹ்மான்
கீழக்கரை நகராட்சிக்கு பல ஆண்டுகளாக ரூ.2 லட்சம் வாடகை செலுத்தாதது மற்றும், கடையை கிட்டங்கியாக பயன்படுத்த வேறு ஒருவருக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, ஐந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கீழக்கரை பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒன்பது கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் மறவர் தெரு எம்.சங்கரன் இரு கடைகளுக்கு ரூ.78 ஆயிரத்து 524, கே.காசிநாதன் ஒரு கடைக்கு 75 ஆயிரத்து 230, கோகுல் நகர் பி.தினகரன் ஒரு கடைக்கு 64 ஆயிரத்து 230 ரூபா வாடகை பாக்கி வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாததால் இவர்களது கடைகளுக்கு கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் உத்தரவுபடி துப்புரவு ஆய்வாளர் ரவி சங்கர்,அலுவலர்கள் கார்த்திக்,மனோகரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், சீல் வைத்து பூட்டு போட்டனர்
.
மாற்று திறனாளி கே.ராமமூர்த்திக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.டி., பூத் கடை, வேறு நபருக்கு வாடகைக்கு விட்டு கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டதால் இந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது,
கீழக்கரை நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் பாக்கி அதிகம் உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் உள்ளவர்கள் பெயர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரிபாக்கி செலுத்தாதவர்களின் வீட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
சபாஷ் கமிஷனர் (பொறுப்பு) சாப்.
ReplyDeleteவரி சம்பந்தமான பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டுப் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து ஜமாயிக்கப் போகிறீர்கள்.மீடியாக்களிலும் வலம் வரப் போகிறீர்கள். வரியை ஒழுங்காக செலுத்தாதவர்களுக்கு சட்டப்படி சரியாக இருக்கலாம்.
ஆனால் வரியை முறையாகச் செலுத்தியும் வீட்டு குடிநீர் வினியோகம் சீராக இல்லாமைக்கு யார் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இது சம்பந்தமாக தங்கள் பார்வைக்கு மனுக்கள் கொடுத்தும் அதில் ஒட்டிய இரண்டு ரூபாய் கோர்ட் பீ ஸடாம்புக்கு கூட மரியாதை இல்லையே! நகரின் குடிநீரின் சீரான வினியோகத்திற்கு பொது துறை நிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு கடனாக வாங்கியும் இது நாள் வரை சீராகமல் நகராட்சி கடனில் தத்தளிப்பதுதானே மிச்சம். ஆண்டவர்கள், ஆள்பவர்கள் பொது மக்கள் நலம் பேணாது
(தொடர்ச்சி)
ReplyDeleteகண்டதே காட்சி கொண்டதே கோலம் என நிர்வகிப்பதால் உள்ளாட்சி அமைப்பின் தத்துவமே மரண கிணற்றில் மூழ்கி திணறிக் கொண்டு இருக்கிறது.
அது சரி. கீழக்கரை நகராட்ச்சியாக அந்தஸ்து பெற்று ஆண்டுகள் பல கடந்தும் நிரந்தர ஆணையர் நியமிக்கப் படாத தன் மர்மம் தான் என்ன? ஆணையராக தகுதி பெற்றவர் நாட்டிலே இல்லையா?