பள்ளி ஆண்டு விழாவில் மகேந்திரா வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பேரல்மாண்டிசோரி நர்சரி அண்டு பிரைமரி பள்ளியின் 20வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஷரிபாஅஜீஸ் தலைமை வகித்தார். பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹக்பீல் மரைக்கா(11), மூன்றரை டன் எடை கொண்ட மகேந்திரா வேனை இடுப்பில் கயிற்றை கட்டி 100மீட்டர் து�ரம் வரை இழுத்து அனைவரின் பாராட்டை பெற்றார். விழாவில், கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர், தலைமையாசிரியர் சாகிராபானு, சீதக்காதி அறக்கட்டளை துணைமேலாளர் சேக்தாவூது, தாசிம்பீவி அப்துல்காதர், மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா கலந்துகொண்டனர்.
பள்ளி கராத்தே ஆசிரியர் கண்ணன் கூறுகையில், “மாணவர் ஹக்பீல் மரைக்கா, கராத்தே வகுப்பில் கிரீன் பெல்ட் பெற்றுள்ளார். பெற்றோர் ஊக்கம் அளிப்பதால் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என மாணவர் விரும்பினார். வேனை இழுத்து சாதனை புரிய வேண்டும் என கருதி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது பள்ளியில் நடந்த விழாவில் மகேந்திரா வேனை இழுத்து சாதனை புரிந்துள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் நடந்த கராத்தே (குமித்தே பிரிவில்) போட்டியில் ஹக்பீல்மரைக்கா முதலிடம் பெற்றுள்ளார்,”என் றார்.
கீழக்கரை பேரல் மாண்டிசோரி நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் நடந்த 20வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் 6ம் வகுப்பு மாணவர் ஹக்பீல்மரைக்கா மகேந்திரா வேனை 100மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார்.
செம்மொழியாம் தங்கத் தமிழில், வியக்கத்தகு வகை சூடிய வரை பாராட்ட, புகழ்ந்துரைக்க எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை வார்த்தைகளையும் ஒன்று திரட்டி அந்த இளம் மாவீரனுக்கு மனதார வாழ்த்தி சமர்பிக்கின்றோம்.. அவரை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகையினருக்கும், ஊக்கம் ஊட்டி உறுதுணையாக இருந்த தாய் தந்தையருக்கும், மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் இதயம் கனிந்த பாராட்டுகள்
ReplyDeleteகீழக்கரை சாதனையாளர்கள் நிறைந்த ஊர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.... வாழ்த்துக்கள்............
ReplyDelete