Monday, January 28, 2013

கீழ‌க்க‌ரை அருகே பேச்சாளை மீன் ஏற்றி சென்ற‌ 14 லாரிக‌ள் ப‌றிமுத‌ல்!!


ராமேஸ்வரத்திலிருந்து பேசாளை மீன்களை, தூத்துக்குடிக்கு ஏற்றிச் சென்ற 14 லாரிகளை கீழக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு லாரி டிரைவர்கள் அபராத தொகை செலுத்தியதால் விடுவிக்கபட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை, பாம்பன், ஏர்வாடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இப்ப‌குதி க‌ட‌லில் பிடிப‌டும் பேச்சாலை மீன்க‌ள் அதிக‌ள‌வில் கேர‌ளாவிற்கு ஏற்றும‌தி செய்கின்ற‌ன‌ர் கேரளா மக்களால் "மத்தி' என்றழைக்கப்படும் இப்பேச்சாளை மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். லாரி, வேன்களில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.மேலும் கெட்டு போன மீன்கள் கோழி தீவனத்திற்காக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

சாலை வ‌ழியாக‌ வாகனங்கள் மூல‌ம் எடுத்து செல்லும் போது மீன்களில் இருந்து வழியும் ரத்தம் கலந்த கழிவு நீர் சாலையில் வ‌ழிந்து வாக‌ன‌ங்க‌ள் செல்லும் வ‌ழிக‌ளெல்லாம் கடும் துர்நாற்றம் வீசுவ‌தாக‌வும்.இக‌ழிவுநீர் வழுவழுப்பு தன்மை உடையதால் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விப‌த்துக்குள்ளாகின்ற‌ன‌ர் என்று அப்ப‌குதி ம‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டி வ‌ந்த‌ன‌ர்.

 இதை தடுக்க கோரி கடந்தாண்டு கீழக்கரை அருகே இளைஞர்கள் பேசாளை ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்தனர். பாதுகாப்பான முறையில் பேசாளை மீன்களை வாகனங்களில் கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்தும் கேரளா மீன் வியாபாரிகள் கண்டு கொள்ள‌வில்லை.

இந்நிலையில் நேற்று மாலை கீழக்கரை வழியாக தூத்துக்குடிக்கு லாரிகளில் பேசாளை மீன்கள் ஏற்றிச் சென்றனர். கீழக்கரை டி.எஸ்.பி,சோமசேகர் தலைமையில், பரமக்குடி இயக்க ஊர்தி ஆய்வாளர் (நிலை 2) அசோக்குமார்,கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் காஞ்சிரங்குடி அருகே சோதனை நடத்தினர்.பேசாளை மீன்களை ஏற்றி வந்த 14 லாரிகளை பிடித்தனர்.இதில் இரண்டு லாரி டிரைவர்கள் அபராத தொகை 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். மற்ற 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இப்ப‌குதியில் ஒரே நேர‌த்தில் இத்த‌னை லாரிக‌ளை ப‌றிமுத‌ல் செய்த‌து இதுவே முத‌ல் முறையாகும்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.