Wednesday, January 23, 2013

கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டத்திற்கு 1 ல‌ட்ச‌ம் ம‌ர‌க்க‌ன்றுக‌ள்!ந‌டிக‌ர் விவேக் அறிவிப்பு!



மாவட்ட நிர்வாகம், பசுமை கலாம் நிறுவனம் மற்றும் முகம்மது சதக் அறக்கட்டளை இணைந்து மரக்கன்று வழங்கும் விழாவை கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடத்தின.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கலெக்டர் நந்தகுமார், கோவை ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர், முகம்மது சதக்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், “மரங்களை வெட்டி அழித்தால் மழை எப்படி பெய்யும். ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே வறட்சியான மாவட்டம். இங்கு மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். இயற்கையான விளைநிலங்களை பலர் இன்று விற்கின்றனர். அவற்றை வாங்குவோர் மனைகளாக மாற்றுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். மாவட்டம் முழுவதும் மரங்கள் வளர்த்து பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும். இதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்,”என்றார்.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, பசுமை கலாம் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அப்துல்கனி, நடிகர் செல்முருகன் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்January 23, 2013 at 7:30 PM

    மரம் நட முயற்சிக்கும் அதே வேளையில் நீர் ஆதாரத்தையே கருவருக்கும் காட்டு கரு வேல மரங்களை வேரோடு சாய்க்க சங்கலப்ம் செய்வோமாக

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.