கீழக்கரை ராமநாதபுரம் சாலையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று உயிழப்புகள் ஏற்பட்டுள்ளன குறிப்பாக டூ வீலர்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி இளம் வயதில் உயிரழப்புக்கள் ஏற்பட்டு வருவதினால் இப்பகுதி மக்கள் பெரும் மன வேதனைக்குள்ளாகியுள்ளார்கள்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறுகையில்.....
சமீபகாலமாக இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து உயிழப்புகள் ஏற்பட்டுள்ளது அதிக மனவேதனையை தருகிறது.வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்.குறிப்பாக டூவீலரில் செல்பவர்கள் தலைகவசம் அணிந்து கொள்ளுங்கள்.அதிக வேகம் வேண்டாம் டூ வீலரில் செல்லும் போது சாலையின் நட்ட நடுவே செல்லாதீர்கள்
வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்கள் ஒருமுறை உங்கள் அன்பான தாய்,தந்தையர் உள்ளிட்ட குடும்பத்தினரை நினைவில் வைத்து பொறுப்புகளை நெஞ்சில் நிறுத்தி மிதமான வேகத்தில் சென்று இறைவன் உதவியால் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு உங்கள் சகோதரியாக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .மேலும் சக்கரக்கோட்டை அருகே உள்ள சாலையை செப்பனிட சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.
கீழக்கரை முஜிப் கூறுகையில் ,
இவ்வழியே செல்லும் வெளி மாநில வாகனங்கள் அதி வேகமாக செல்கிறார்கள்.சில காலம் முன்பு அடையாளம கண்டு பிடிக்க முடியாத வாகனம் மோதி கீழக்கரையை சேர்ந்த கர்ப்பிணி சகோதரி ஒருவர் உயிரழந்தார்.இப்படி தொடர்ச்சியாக உயிரழப்புகள் ஏற்படுகின்றன. வெளி மாநில பஸ்,லாரி போன்ற வாகனங்கள் அதி வேகமாக செல்வதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்.என்றார்.
அமீரக காயிமில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் கூறுகையில்,
தொடர் விபத்துக்களில் ஏற்படும் உயிரழப்புகள் மிகுந்த மன வேதனையை தந்துள்ளது.காலமானவர்களுக்கு பேரருளாளன் இறைவனிடம் நற்பதவியை பெற துஆ செய்கிறேன் அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இழப்புகள தாங்கும் மன தைரியத்தையும்,மன அமைதியையும் உண்டாக்க இறைஞ்சுகிறேன் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.