மாவட்ட வாலிபால் கழகம், பரமக்குடி ரோட்டரி கிளப் இணைந்து பரமக்குடியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியை நடத்தின.
வாலிபால் கழக, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை வகித்தார். செயலாளர் ராமசுந்தர் வரவேற்றார். நகராட்சி தலைவர் கீர்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பிரபு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
சீனியர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் 20 அணிகள் இடம்பெற்றன இதில் கீழக்கரை மூர் அணி முதலிடம் பெற்று 5வது முறையாக மாவட்ட அளவிலான சுழற்கோப்பையை கைப்பற்றியது. மைபா அணி இரண்டாமிடம் பெற்றது.
அதே போன்று பள்ளி மாணவர்களிடையே நடந்த போட்டியில், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி இறுதி போட்டியில் நுழைந்து இரண்டாமிடம் பெற்றது.
மாணவியருக்கான போட்டியில், பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி முதல், ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
மாவட்ட வாலிபால் கழக சேர்மன் டாக்டர் கியாதுதீன், புரவலர் சின்னத்துரை அப்துல்லா, இணைச்செயலாளர் சோமசுந்தரம் பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.