ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நேற்று நடைபெற்ற மாவட்ட கைப்பந்து போட்டியில் கோப்பையை வென்றுள்ளதாவும் இதுவரை 45க்கும் மேற்பட்ட இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று தமது அணியினர் கோப்பைகளை வென்றுள்ளதாகவும் மூர் அணியின் நிர்வாகி ஹசனுதீன் தெரிவித்துள்ளார்.


பல்வேறு விளையாட்டு துறைகளில் சிறப்பாக செயல்படக்கூடிய ஏராளமானோர் வாய்ப்புகள் கிடைக்காததால் அத்துறைகளில் சாதிக்க முடியாமல் ஒதுங்கி விடுகின்றனர். இது போன்ற திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தினால் உலகின் தலை சிறந்த வீரர்கள் உருவாவார்கள்.அப்படி இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் பணிகளில் கீழக்கரை மூர் விளையாட்டு கிளப் போன்ற தனியார் அணிகள் ஈடுபட்டு வருகிறது.


கீழக்கரை மூர் கைப்பந்து அணி பல ஆண்டுகளாக செயல்பட்டு ஏராளமான கைப்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளதாகவும் இன்னும் ஆர்வமுள்ள இளைஞர்களை தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதே எங்களது நோக்கம் எனவே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மூர் அணி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் அவர்கள் பயிற்சி ஆட்டங்களில் பங்கு பெற செய்யப்பட்டு அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்
ஆர்வமுள்ளவர்கள் 9444828805 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நிறுவனர் ஹசனுதீன் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஹசனுதீன் கூறியதாவது,

கீழக்கரை மூர் கைப்பந்து அணி கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கைப்பந்து விளையாடுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு எங்கள் மூர் அணிக்காக விளையாடுவார்கள் இப்படியாக 50க்கும் மேற்பட்ட சிறந்த கைப்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளோம்.இதற்காக எவ்வித கட்டணமும் பெறப்படுவதில்லை.அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்று கொள்கிறோம்.




எங்கள் அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இது வரை சிறு போட்டிகளிலிருந்து மாநில அளவிலான போட்டி வரை ஏராளமான ஆட்டங்களில் பங்கேற்றுள்ளோம்.இறையருளால் 45 கோப்பைகளுக்கு மேல் கைபற்றியுள்ளோம்.எங்கள் அணிக்காக விளையாடிய பலர் இன்று தலை சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர்.நேற்று ஏர்வாடியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று எமது அணியினர் கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.எனது தந்தையார் சம்சுதீன் அவர்கள் விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வமுடையவர் அவ்வழியில் நாங்களும் எங்களால் முடிந்த சிறு பங்களிப்பை விளையாட்டுத்துறைக்காக செலுத்துகிறோம்.இறைவனுக்கே எல்லா புகழும்.

கீழக்கரையில் கைப்பந்தில் மட்டுமல்ல கால்பந்து,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க நமது ஊரை சேர்ந்த செல்வந்தர்கள் ஏராளமான விளையாட்டு கிளப்க்ளை உருவாக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.இதன் மூலம் பல தலை சிறந்த வீரர்கள் கீழக்கரையில் உருவாவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்
/>
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.