Monday, January 28, 2013

கீழ‌க்க‌ரை அருகே ஆட்டோவில் ம‌து விற்ற‌தாக‌ 3பேர் கைது!


தமிழக அரசால் ஜன., 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள் அடைப்பால் திண்டாடும் "குடிமகன்க‌ளுக்காக‌ கீழக்கரையில் பல்வேறு இடங்களில் சமூக விரோத கும்பல் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு தடையின்றி விற்பனை செய்தனர். முக்கிய திருப்பங்களில் இன்பார்மர்கள் நின்று கொண்டு போலீசார் வருகையை கண்காணித்து தகவல் கொடுத்தனர். இதனால் கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து..
கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆட்டோவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில், எஸ்.ஐ., செல்லச்சாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். ஆட்டோவில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த  பசீர் அகமது, 28. பைக்கில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்த மவுசீன், 38. உதவியாக இருந்த  செல்வம், 33, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 73 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.