Wednesday, November 6, 2013

கீழக்கரை பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமுறை மீறல்கள்! 227 பேர் மீது வழக்கு!









ராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அதிக வேகத்தில் சென்ற 8 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 பேர் மீதும், அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற 108 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 110 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற 69 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர தலைக்கவசம் அணியாமல் சென்ற 91 பேர் மீதும், கண் கூசும் முகப்பு விளக்குகளை பொருத்தியி ருந்த 20 பேர் மீதும், இதர பிரி வுகளின் கீழ் 797 பேர் மீதும் என மொத்தம் 1,255 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இதில் 1,212 பேரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட் டுள்ளது. மற்றவர்களிடம் கோர்ட்டு மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

கீழக்கரை துணை சூப்பிரண்டு சோமசேகர்

இதேபோல கீழக்கரை பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசேகர் தலைமையில் நடைபெற்ற சோதனையில் ஓட்டுனர் உரிமம் இல்லாத 25 பேர் மீதும், 

சீருடை அணி யாத 80 பேர் மீதும், தலைக் கவசம் அணியாத 100 பேர் மீதும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்த 35 பேர் மீதும், கண் கூசும் விளக் குகளை பொருத்தியிருந்த 35 பேர் மீதும்,
 அதிக வேகத்தில் சென்ற 10 பேர் மீதும், இதர பிரிவின் கீழ் 40 பேர் மீதும் என மொத்தம் 227 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இவர்களிடம் இருந்து ரூ.43,800 அபராதமாக வசூ லிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விபத்துக்கள்  அதிகளவில் நடைபெற்று உயிழப்புகள் தொடர்ந்து வருவதால்  அதிவேகமாக வாகன ஓட்டுவது,மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறுபவர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடதக்கது 


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.