கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவை தெற்கு தெரு முஸ்லிம் பொதுநல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிடோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது கீழக்கரை நகராட்சி 18 வது வார்டு பகுதியில் சின்னக்கடை தெருவில் இருந்து தெற்குதெரு வழியாக
பேட்டைதெரு ( யூசுப் சுலைஹா கிளினிக் வரை உள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கழிவு நீர் கால்வாய்களுக்கு மூடி போட வேண்டி கோரிக்கை விடுத்தனர்
18 வது வார்டு பகுதியில் கடந்த
ஐந்து வருட காலமாக மேற்குறிப்பிட்ட பகுதியில் கால்வாய் மூடி போடாததால் அந்த
கால்வாய் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது ,அதில் சாலைகளில் உள்ள குப்பைகளும்
விழுகின்றன.இதனால் கால்வாய் அடிக்கடி அடைப்பு ஏற்பபட்டு வழிந்து ஓடுகிறது அதுதவிர ஒருசில வீட்டில் உள்ள கிணறுகளிலும் கால்வாய்
தண்ணீர் கலந்து விடுகிறது .
இதனால் சுகாதார சீர்கேடு
உண்டாகி அப்பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ,மழை காலங்களில்
சாலைகளில் உள்ள மணல்களை மழை நீர் அடித்து சென்று கால்வாயில் விடுகிறது இதனால்
கால்வாயில் அதிக மணல்களினால் கழிவு நீர் ஓடுவதில் சிக்கல் ஏற்படுகிறது எனவே கால்வாயை ஒருஅடி தோண்டி தூர்வாரி அந்த கழிவு மணல்களை அங்கிருந்து
அப்புறபடுத்திவிட்டு கால்வாய் மூடி போட வேண்டும் என அந்த பகுதி மக்கள்
சார்பில் எங்களது தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கம் கோரிக்கை வைக்கிறோம்
,இந்த மனுவின் அவசர நிலை கருதி நமது நகராட்சி தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை
எடுக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீர் செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முஸ்லிம் பொது நல சங்கத்தின் அவருக்கு நன்றி தெரிவித்தனர்
மேன் மேலும் நமது முஸ்லிம் பொதுநல சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்..
ReplyDeletewww.mpnskilakarai.blogspot.com
. ♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)