Tuesday, November 12, 2013

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் பட்டம் விடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்!




 மாறுவேட போட்டி

கீழக்கரை பியர்ல் மாண்டிசோரி பள்ளியில் மாணவ குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு  போட்டிகள் ,கலை பொருட்கள் செய்யும் போட்டி ,பட்டம் விடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல் வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் BLUE DAY & KITE FESTIVAL என்கிற பெயரில் மாணவ மாணவியரின் திறமைகளை வெளி காணும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் பங்கேற்ற சின்னஞ்சிறு மாணவ மாணவியர், ஒற்றுமையை வெளிபடுத்தும் விதமாக, நீல வண்ணத்தில் உடையணிந்து கொண்டு பட்டம் பறக்க விடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். 

மேலும் மற்றொரு தினத்தில் ஓவியம் தீட்டுதல், பெயிண்டிங், கட்டிடக் கலை வீணாகும் பொருட்கள் மூலம் கலை பொருட்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கும், ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.