Friday, November 8, 2013

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்க்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி !

கீழக்கரை மறவர் தெருவைச் சேர்ந்தவர் திருச்செல் வம்(33). இவர் 17.5.2010ல் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் சென்றுள் ளார். அப்போது ஏர்வாடி முக்குரோடு அருகே முன்பக்கமாக இறங்கும்போது தவறி விழுந்ததில், பின் பக்க சக்கரம் ஏறியதில் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி, கணவர் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 19.10.2012ல் ரூ.7.93 லட்சம் இழப்பீடு காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க கோர்ட் உத்தரவிட் டது. ஓராண்டாக அந்த தொகை வழங்கப்படாததால், அந்த தொகையுடன் வட்டியுடன் சேர்த்து வழங்க நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து வட்டியுடன் ரூ.8.69 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த தொகையும் வழங்கப்படாததால், கூடுதல் மாவட்ட நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாவட்ட நீதிபதி சதாசிவம், காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட் டார். அதன்படி கோர்ட் அமீனா முருகேசன், நேற்று காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக ராமேஸ்வரத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்சை ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ஜப்தி செய்து, கோர்ட்டிற்கு எடுத்துச் சென்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.