கீழக்கரை அருகே வேன் மோதியதில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இசிஆர் சாலையில் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 6 மாதங்களுக்கு முன்பு வேன் மற்றும் ஆட்டோ மோதியதில் நிழற்குடையின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு சுவர்கள் மட்டும் நிழற்குடை தாங்கி நிற்கிறது. இதுவும் எப்போது விழும் என்று கூற முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிழற்குடையின் கீழ் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கிராம மக்களும், பள்ளி மாணவ, மாணவர்களும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இந்த ஆபத்தை உணர்ந்து நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்த நிழற்குடை விழுந்து உயிர் பலி வாங்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபற்றி வேல்சாமி என்பவர் கூறுகையில்,
பள்ளி முடிந்ததும் பஸ்சுக்காக மாணவர்கள் இந்த நிழற்குடையின் கீழ் காத்திருக்கின்றனர். அண்மையில் பெய்த மழையால் நிழற்குடையின் தூண்கள் மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் அதிகாரிகள் உடனடியாக இதை அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மராமத்து பார்க்க விட்டாலும் பரவாயில்லை. விபரிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை இடித்து தள்ள வேண்டும்.
ReplyDeleteமேலும் இதன் அருகில் தான் கீழக்கரை டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளது.அவர்கள் கண்ணில் படவே இல்லையா? அவர்களாவது சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுருத்த மாட்டார்களா? நாளை விபரிதம் நடந்தால் (இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக) அவர்களுக்கு தானே கூடுதல் பணியாகும். இனியும் காலம் தாழ்த்தாது செயல் படுவார்கள் என நம்புவோமாக