Friday, November 22, 2013

உலக இஸ்லாமியர்களில் செல்வாக்குமிக்க 500பேரில் ஒருவராக கீழக்கரை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் தேர்வு!



உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக  தேர்வு உலகில்  முக்கிய தலைவர்கள் ,தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தொழித்துறை பிரிவில் உலகில்  செல்வாக்குள்ள இஸ்லாமியர்கள் என்று 24 நபர்கள்(2013/2014) தேர்வு செய்யப்பட்டு அதில் இந்தியாவிலிருந்து ஒருவராக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 http://themuslim500.com/ http://themuslim500.com/profile/abdur-rahman-b-s என்ற இணையதளத்தில் காணலாம்





இவரை பற்றி சிறு குறிப்பு உதவி - மஹ்மூத் நெய்னா :


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின்முன்னோடியும்தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும்தயாளகுண சீலருமான சேனா ஆனா  என்றுஅழைக்கப்படும் வள்ளல் பிஎஸ்அப்துர்ரஹ்மான்  ஐக்கியஅரபுஎமிரேட் நாட்டின் துபாயைதலைமையிடமாக கொண்டு இயங்கிவரும்ரியல் எஸ்டேட்கட்டுமாணம்மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த .டி. அஸ்கான் மற்றும் ஸ்டார் குழுமநிறுவனங்களின்  நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பிஎஸ்அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும்தமிழகம் முழுவதும் உள்ளஎண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும்காப்பாளராகவும் இருந்துவருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம்சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம்ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,

முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர்  ,கலைஞர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.

இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.

 இது தொடர்பான செய்தியை காண... http://keelakaraitimes.blogspot.ae/2013/10/blog-post_31.html

8 comments:

  1. மாஷா அல்லாஹ் . அவர்கள் அவர்களின் பிறந்த மண்ணிற்கு பெருமை மட்டும் அல்ல , சிறந்த வணிகத்தில் தலை சிறந்த -இஸ்லாமியர் பட்டியலில் வருவது . .. வணிகத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு ஊக்கம் , எழுச்சி மகிழ்ச்சி ,மேல வரவேண்டும் என்ற ஒரு சிறந்த மனப்பான்மை

    ஏராளமானவர்கலுகு வேலை வாய்ப்பை தந்து கொண்டு இருக்கும் ஒரு - சிறந்த மாமனிதர்

    அவர்களின் - இந்த சேவைக்கு நாம் அனைவரும் -துஆ செய்வோம் . ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் . அவர்கள் அவர்களின் பிறந்த மண்ணிற்கு பெருமை மட்டும் அல்ல , சிறந்த வணிகத்தில் தலை சிறந்த -இஸ்லாமியர் பட்டியலில் வருவது . .. வணிகத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு ஊக்கம் , எழுச்சி மகிழ்ச்சி ,மேல வரவேண்டும் என்ற ஒரு சிறந்த மனப்பான்மை

    ஏராளமானவர்கலுகு வேலை வாய்ப்பை தந்து கொண்டு இருக்கும் ஒரு - சிறந்த மாமனிதர்

    அவர்களின் - இந்த சேவைக்கு நாம் அனைவரும் -துஆ செய்வோம் . ஆமீன்

    ReplyDelete
  3. எல்லோராலும் சம்பாதித்து விட முடியும், யார் வேண்டுமானாலும் செல்வந்தர் ஆகி விடலாம்..! ஆனால் தன் சமூகமும் தன்னைப் போல் சம்பாதிக்க வேண்டும், செல்வத்தை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்...? தான் அடைந்த மேன்மையை தன் சமூகமும் அடைய வேண்டும்..என்ற நோக்கில் செயல்பட்டு, அந்த சாதனையை நிகழ்த்தி காட்டி, தான் பிறந்த ஊரையே செல்வபுரியாக மாற்றிக்காட்டிய “வியாபார மந்திரவாதி” மதிப்பிற்குரிய பி.எஸ்.ஏ அவர்கள்,உலக முஸ்லிம்களில் 500களில் ஒருவராக அல்ல, முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்க தகுதி உடையவர் என்றால் அது மிகையாகாது...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் . அவர்கள் அவர்களின் பிறந்த மண்ணிற்கு பெருமை மட்டும் அல்ல , சிறந்த வணிகத்தில் தலை சிறந்த -இஸ்லாமியர் பட்டியலில் வருவது . .. வணிகத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு ஊக்கம் , எழுச்சி மகிழ்ச்சி ,மேல வரவேண்டும் என்ற ஒரு சிறந்த மனப்பான்மை

    ReplyDelete
  5. liyakath ali--from koothanallur----I will pray BSA---TO BE HAPPY MAN IN WORLD.I was in his school from 1969 to 1977

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.