Friday, November 1, 2013

சேதமடைந்த நிலையில் கீழக்கரை தோரண வாயில்!சீர்படுத்த கோரிக்கை!


கீழக்கரை எல்லையில் பெரிய அளவில் நுழைவு தோரண வாயில் சிமெண்ட் கட்டிடம் உள்ளது .

பல்லாண்டுகளுக்கு முன் வள்ளல் சீதக்காதி நினைவு தோரண வாயில் அமைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது வள்ளல் சீதக்காதி நினைவு தோரண வாயில் மேற்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முஜீப் கூறுகையில்,

கீழக்கரை நுழைவு பகுதியான இந்த சாலையில் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் தோரண வாயிலின் மேற்பகுதி இடிந்து விழுமானால் ஆபத்து ஏற்பட்டு விடும் எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்றார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாNovember 1, 2013 at 9:39 PM

    கன ரக போக்குவரத்து அதிகம் உள்ள இப் பகுதியில் அதிர்வு காரணமாக் எந்த நேர்த்திலும் எதுவும் நடக்கலாம்.மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும்.நிச்சயமாக கீழக்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காது. காரணம் அது தில்லையேந்தல் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது.கோடிகளில் புரளும் நகராட்சிக்கு முதல் குடிமகள் குப்பை கூடைகள தன் சொந்த செலவில் வழங்கக் கூடிய நிலையில் தான் உள்ளது?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.