Monday, November 11, 2013

போலி ஐடிக்களில் அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து நடவடிக்கை ! கீழக்கரை நகராட்சி அறிவிப்பு!


தொலைபேசியில் மிரட்டல்,செல்போனில் மிரட்டல் என்றெல்லாம் புகார்கள் கூறப்படும் தற்போது சமூக இணையதளங்களில் போலி முகவரிகளில் மிரட்டுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.இன்று உலகம் பேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக இணைய‌தளங்கள் உலகெங்கும் பிரபலமடைந்து உள்ளது அதில் பட்டி தொட்டிகளும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்கை பேஸ் புக் ,டிவிட்டர் பெயர்களின் உருவாக்கி சர்ச்சைகள் ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பலர் இது போன்ற‌ செய‌ல்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கூறப்ப‌டுகிற‌து.

சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் புகைபடங்களை உபயோகித்து அவர்களுக்கு தெரியாமலே சமூக வலைதளங்களில் போலி ஐடிக்களை விஷமிகள் உருவாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதன் மூலம் தங்களின் அந்தரங்கங்களையும் ,தவறான தகவல்களையும் வெளியிடுவதாக மனம் குமுறுகின்றனர்.மேலும் தங்களை பற்றி பொய்யான தகவல்களை தங்களது அலுவலக விவாகரங்கள் குறித்து அவதூறுகளையும் பரப்பி வருவதாக இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி கமிஷனர் அயுப்கான் மற்றும் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறுகையில்,

கீழக்கரை நகராட்சி குறித்து பல்வேறு பொய்யான அவதூறுகளையும், மிரட்டல்களை போலி பெயர்களில் சமூக இணையதளங்களில் செயல்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறையிடம் புகார் தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.நிர்வாகத்தில் குறைகள் இருந்தால் தங்கள் பெயர் முகவரியுடன் சுட்டிகாட்டுங்கள் சரி செய்யப்படும் என்றார்





கீழக்கரையை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகுபர் ஹமீது இப்ராஹிம் கூறுகையில்,

எனக்கும் இது போன்ற இணையதளங்களில் போலியான பெயர்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அவதூறும் பரப்பினார்கள்.நான் பெரிதாக எடுத்து கொள்ளாவிட்டாலும் என்னை சார்ந்தவர்களுக்கு பெரும் மன உளைச்சளை தந்தது.இது குறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.






No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.