Monday, November 25, 2013

ராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்!



கீழக்கரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலை  முக்கிய வழியாக இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன மேலும் இச்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பகுதி வழியாக தார்பாய் போடாமல், திறந்தவெளியில் மணல் எடுத்துச் செல்வதால், காற்றில் பறந்து, ஏராளமான மணல் சாலையில் விழுகிறது.மேலும் சாலையில் மணல் கொட்டுவதால், சாலையோரம் குவியலாக காணப்படுகிறது. இதில், இருசக்கர வாகனங்களில் செல்வேர், சறுக்கி விழும் அபாயம் உள்ளது.சாலை பணி நடைபெறுவதற்காக கொட்டுவதாக கூறினாலும் கொட்டிய மணலை உடனே அள்ளாமல் நாள் கணக்கில் சாலையில் குவிந்து கிடக்கிறது.

 இதற்கு பயந்து, பெரும்பாலான வாகன ஓட்டிகள், நடுரோட்டில் செல்வதால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணல் குவியலை அகற்றுவதுடன், தார்பாய் போடாமல் மணல் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு, அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.