கன்னியாகுமரி மாவட்டம் சிக்கனங்கோட்டையை சேர்ந்தவர் ஆல்பர்ட் ராஜ், 46. இவர், நேற்று காலை குடும்பத்தினருடன் வேளாங்கன்னிக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர்.
கீழக்கரையை அடுத்த திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்த கார் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் காரில் இருந்த ஆல்பர்ட் ராஜ், ராஜாசிங், செல்வராஜ், லிவின், ஜஸ்டின் செல்வசேகர் ஆகிய ஐந்து பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர், முசிறியை சேர்ந்த ரகுபதி, 23, யை எஸ்.ஐ.,ஜேசுதாஸ் கைது செய்தார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் கூறியதாவது,
இப்பகுதி சாலையில் தொடர் விபத்துக்கள் நடந்தவாறு உள்ளது.அதிவேகமே விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.இனியும் அரசு விழித்துகொண்டு நடவடிக்கை எடுக்கா விட்டால் உயிழப்புகள் தொடர்கதையாகி விடும்.உடனடியாக போக்கு வரத்து காவலர் ரோந்து வாகனத்தை இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தி கண்காணித்து அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரழந்தது குறிப்பிடதக்கது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.