ராமநாதபுரம் மாவட்டம் ஒரு பக்கம் வறட்சி மாவட்டமாக இருந்தாலும் மறு பககம் ஆன்மீக தலங்களும் சுற்றுலா தலங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள் வெளியூர்களிலுருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும் பஸ்,வேன்,கார் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக
ராமநாதபுரம் - கீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுகிறது இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக மாயகுளம் பகுதியில் சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார்.
சாலை விபத்துகளை தடுக்கவும், குறிப்பாக அதிகவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தவும் ,அத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன தொழில்நுட்ப (ஸ்பீடு ரேடார்) முறை புகுத்தப்பட வேண்டும்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை கண்காணிக்க ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு நவீன கருவி வழங்கப்பட வேண்டும்
.இத்தகைய நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தால் வாகன ஓட்டுநர்களும் எச்சரிக்கையுடன் செயல்படுவர். குறிப்பிட்ட வேகத்திலேயே வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் குறையும்.தமிழகத்தில் ஏறகெனவே சில இடங்களில் நவீன தொழில் நுட்ப(ஸ்பீடு ரேடார்) நடைமுறைக்கு வந்து விட்டது குற்ப்பிடதக்கது.
இத்துடன் திருப்பங்களில் உள்ள நேர் பார்வையை மறைக்கும் ப்டர்ந்து விரிந்திருக்கும் காட்டு கரு வேல் மரங்களை வேரோடு க்ருவறுக்க வேண்டும். குறிப்பாக வண்ணான் குண்டு பகுதி, திருப்புலாணி முச்சந்தி. தெற்குத் தரவை பிரிவு பகுதி குறிப்பிடத் தக்கதாகும்.
ReplyDeleteமேலும் சந்தி சிரிக்கக் கூடிய காரணங்களால் புழக்கத்திற்கு வராமல் இருக்கும் ஆர்.எஸ். மடை - மண்டபம் குறுக்குச் சாலை பயன் பாட்டிற்கு வர வேண்டும்.இதனால் ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் உள்ள ரயில்வே கிராஸ்சிங் அருகில் உள்ள “ஜிக்-ஜாக்” முச்சந்தியில் ரயில்வே கேட் அடைப்பின் போது உண்டாகும் போக்குவ்ரத்து சிரம்ங்கள், வேதனைகள் வெகுவாக குறையும்.
அரசு துறையும், நாடாளு மன்ற (?), சட்ட மன்ற மக்கள் பிரதிநிதிகள் கருணை காட்டுவார்களா?.