Thursday, November 14, 2013

கீழக்கரையில் எரியாத தெரு மின்விளக்குகளை சீர் செய்ய கோரிக்கை!

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதர் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருப்பதாக சீர்செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. பொது மக்கள், பெண்கள் வெளியில் நடந்து செல்ல பயப்படும் நிலை உள்ளது.
கீழக்கரை சொக்கநாதர் கோயில் பின்புறத்தில் மயானப்பகுதி அருகே மின்சார ஒயர்களை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ள கருவேல மரங்கள்.
சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. பொது மக்கள், பெண்கள் வெளியில் நடந்து செல்ல பயப்படும் நிலை உள்ளது.
மேலும், சொக்கநாதர் கோயில் பின்புறத்தில் உள்ள ஒரு மயானம் அருகே கருவேல் மரங்கள் வளர்ந்து மின் கம்பங்களில் செல்லும் ஒயர்களில் படுவதால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் பொதுமக்களின் வீடுகளும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து மின்வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பகுதியை சேர்ந்த சங்கர் கூறியதாவது, சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மின்கம்பத்தின் அருகே கருவேல் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து மின்கம்பிகளில் படுவதால் மின்தடை ஏற்படுகிறது. கீழக்கரை நகராட்சி எரியாத தெருவிளக்குகளை மாற்றி சீர்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாNovember 14, 2013 at 9:02 PM

    நன்றி : இன்று முதல் தகவல்.Today First Message
    சில ஆண்டுகளில் நீங்கள் கேன்சரால் அழிவீர்கள்... தப்பிக்க ஒரே வழிதான்!

    உலக தாவர ஆராய்ச்சியாளர்களால் , ஐ நா சபையால் மிகவும் ஆபத்தான நச்சுத்தாவரமென்று தடை செய்யப்பட்டுள்ள தாவர வகைதான் தென் மாவட்டங்கலெல்லாம் பரவிக்கிடக்கும் "கருவேல மரம்".

    இது காற்றை மாசக்கும் கொடிய குணம் கொண்டது. இதன் பாகங்களெல்லாம் நச்சுத் தன்மை வாய்ந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் இந்த விறகுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்து வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒரு நஞ்சை எரித்து அதிலிருந்து வெளிப்படும் புகையை சுவாசிப்போர் நிலை என்னவென்று ஒருநிமிடம் கற்பனை செய்து பாருங்கள். இந்த தாவர தண்டுகளை எரிக்கும்போது வெளிப்படும் புகையை சிகரெட்டோடு ஒப்பிட்டால் பத்து முறை கருவேலமர புகையை சுவாசித்தால் 140 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்கிறது ஓர் ஆய்வு. இந்த கரிமூட்டமிட்டு வாழ்வைக் கழிக்கும் பலர் பல்வேறு உயிரைக் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். சிகரெட் பழக்கம் தவறானது என்று உணரும் சமுதாயம் தன்னை அறியாமலேயே பலநூறு சிகரெட்டுக்களின் நச்சுத் தன்மையை உள்வாங்கியுள்ளது. இந்த நிலையை தடுக்கும் நடவடிக்கைகளில் உங்களுடைய பங்களிப்பு அவசியம் என்பதை உணருங்கள் தோழர்களே...

    நமது பிரச்சனையை நாமே தீர்ப்போம்... கரம் கோருங்கள்!
    "மரங்களை வெட்டுவோம்"
    08/10/20133 fb

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.