Monday, May 30, 2011

கீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி

கீழக்கரை, மே 30&
கீழக்கரை பகுதியில் கட்டுமானப் பணிக்கு தேவையான மணல் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் கிராமப் புறங்களிலிருந்து வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர். தற்போது கீழக்கரை பகுதியில் மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தினமும் வீடு திரும்புகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து அதிகாரிகளும் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பதிலாக 10 நாட்களாகியும் வேறு அதிகாரி நியமிக்கப்படவில்லை. கீழக்கரையில் முன்பு 6 பேருக்குச் சொந்தமான மணல் குவாரி இருந்தது. இதன் மூலம் 10 டிராக்டர்களில் மணல் விநியோகம் செய்யப்பட்டன. இதில் 5 பேருக்கு பெர்மிட் முடிவடைந்தது. ஒருவருக்கு மட்டுமே பெர்மிட் உள்ளது. இதனால் ஒரு குவாரியிலிருந்து மட்டுமே மணல் எடுக்க முடிகிறது. மற்ற 5 குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
குவாரி பெர்மிட்டை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் இல்லாததால் மணல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கட்டிடத் தொழிலாளி செல்வராஜ், சுப்பிரமணி ஆகியோர் கூறுகையில், `10 நாட்களாக எங்களுக்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளோம். வீட்டுச் செலவுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுகிறோம். மணல் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற னர்.

1 comment:

  1. KARANTI PITIKA TERIYATHA THUKKU KUNDU PARTHU MATTAM POOSA THERIYATHA ALUKU INTRIA DINA COOLIE 450 RUPA * ATHILUM 6 MANI NEYRA THODER VELAI PARPATHU KIDAIYADHU * CELL PHONIL MANI KANAKKIL PAYSUVADHU * NAMMA SELAVIL TEA VADAI * COOLIE KODUPAVARAL KOLLAI ATITHUKONDU VARUKIRARKALA ? KALATHIN KATTAYAM SEETHANA VEEDU KATTU PAVARKALIL PARAMA ELAIKALUM UNDU ENPATHAI ANAIVARUM MANTHIL KOLLAVENDUM * AVAR KALLUKKUM VELAI VASI PATHIPPU KADUMAIYAKA UNDU

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.