Friday, September 14, 2012
கீழக்கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!நகராட்சி அலுவலகத்தில் அலோசனை கூட்டம்!
கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், நகராட்சிக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது .
இக்கூட்டத்துக்கு, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா, நகராட்சி ஆணையர் முஹம்மது முகைதீன், துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கீழக்கரை, ராமேசுவரம் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இம்மாதம் 15-ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கீழக்கரை பருத்திக்காரத் தெரு அருகேமொட்டப் பிள்ளைத் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தாற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொள்வது என்றும், மேலும் மசூதிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அணுகி நிரந்தர இடம் மற்றும் கட்டடம் கேட்டுப் பெறுவது என்றும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ரோட்டரி சங்கச் செயலர் சுப்ரமணியன், நகர் தமுமுக தலைவர் செய்யது இபுராஹீம், சாலிஹ் ஹூசைன், மக்கள் சேவை இயக்க நிறுவனர் முஜிபு, ஜமாத் நிர்வாகிகள், கவுன்சிலர்கள், பல்வேறு அமைப்பு மற்றும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராசீக்தீன் செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
இம்மாதம் 15-ம் தேதிக்குள் ஆரமப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவுக்கு விழிப்புடன் செயல் படத் தொடங்கிய நகராட்சி நிர்வாகம், புது நிர்வாகம் பதவி ஏற்றயுடன் போட்ட முதல் தீர்மானமான புது பேருந்து நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் தொடங்குவ்தில் ஏன் இந்த மெத்தனம்? இத்ற்காக ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி குதுகலித்த உங்களுக்கு, மின் கட்டணம் கட்டுவதற்காக மக்கள் படு அவதியும் உங்களுக்கு குதுகலமாக இருக்கிறதா?அதில் உள்ள சிக்கல் தான் என்ன?
ReplyDeleteஇன்று (15/09/12 சனி) நகராட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் போல் மின் கட்டண வசூல் மையத்திற்கும் மக்கள் வீதியில் வந்து போராடினால் தான் தீரவு கிடைக்குமா?