Friday, May 20, 2011

கீழக்கரை தனி தாலுகா !ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பார்வைக்கு ..

கீழக்கரை, மே 20:

கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

கீழக்கரை தனி தாலுகாவாக சில மாதங்களுக்கு முன் திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், கீழக்கரையில் அலுவலகம் அமைக்க இடவசதி இல்லாததாலும், தேர்தல் நடைபெற்றதாலும், இப்பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.
இதனிடையே, நேற்று முன் தினம் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை தாலுகா அலுவலகத்துக்குத் தர முன் வந்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முத்துக்குமரன், வட்டாட்சியர் பிச்சை, மண்டல துணை வட்டாட்சியர் கதிரேசன் பிச்சை, வருவாய் ஆய்வாளர் ஜஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

உயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன், கட்டடப் பணிகள் நடைபெறும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள் ஒப்புதல் என்று மீண்டும் கிடப்பில் போட்டு விடாமல் இருக்க வேண்டும் எனவே நீண்ட காலமாக கீழக்கரை மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தாலுகா அறிவிப்பை செயல்படுத்த பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா முகைதீன் கூறுகையில் , நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவிகப்பட்டதை செயல்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா வாக்குறுதி அளித்திருந்தார்.தற்போது அதற்கான சமயம் வந்து விட்டது எனவே ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கீழக்கரையை தாலுகாவாக மாற்றுவதற்கு உண்டான ஏற்பாடுகளை விரைந்து செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.