கீழக்கரை, மே 25&
கீழக்கரை அருகே செய்யது முகம்மது அப்பா தர்கா செல்லும் வழியில் பாதி தார்சாலையாகவும் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு சொந்தமான பகுதியில் மணல் சாலையாகவும் உள்ளதால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை மேலத்தெரு புதுபள்ளியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலை வில் செய்யது முகம்மது அப்பா தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு செல்லும் சாலை கீழக்கரை நகராட்சிக்கும், தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கும் உட்பட்டது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செம்மண் சாலை போடப்பட்டது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் சாலையாக மாறிவிட்டது. சாலை முழுவதும் மணல் நிறைந்து உள்ளதால் மக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் கடும் சிரமமடைகின்றனர்.
இதனால் இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கீழக்கரை நகராட்சிக்கும், தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கும் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கீழக்கரை நகராட்சி தனது எல்லைக்குட்பட்ட பகுதிவரை தார்ச்சாலை அமைத்து கொடுத்தது. ஆனால் தில்லையேந்தல் பஞ்சாயத்தில் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதி தார்ச் சாலையாகவும், பாதி மணல் சாலையாகவும் காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் உள்ள தர்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருத்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேன், கார் மற்றும் ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர். தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலை முழுவ தும் மணலாக இருப்பதால் வாகனங்கள் மண லில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த மணல் நிறைந்த சாலைய தார்ச் சாலையாக மாற்ற பஞ்சாயத்து விரைவில் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் மனவள்ளி ஆண்டி கூறுகையில், `இந்த சாலையை தார்ச் சாலை யாக அமைப்பதற்கு கூட்டத்தில் ஏற்க னவே தீர்மா னம் போடப்பட்டு தற் போது காலாவதியாகி விட் டது. மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி விரைவில் தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.