Monday, May 30, 2011

கீழக்கரை மார்க்கெட்டில் எடைமோசடி !பொதுமக்கள் புகார்

கீழக்கரை, மே 30:
கீழக்கரை மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் எடை மோசடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரை நகராட்சியில் மீன் மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளிலும் எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு சில கடைகள் தவிர அனைத்து கடைகளிலும் கை தராசு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மீன் மார்க்கெட்டில் ஒரு கடையில் கூட எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்தப்பட வில்லை.
பெரும்பாலான கடைகளில் முத்திரை பதிக்காத தராசு மற்றும் எடை கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
தெருக்களில் விற்கும் வியாபாரிகள் 100 கிராம், 200 கிராம் எடை கற்களுக்கு பதிலாக ஜல்லி கற்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரு கிலோ காய்கறி அல்லது மீன் வாங்கினால் அதில் 800 கிராம் தான் உள்ளது. இந்த மோசடியை தடுத்து நிறுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் அதிகாரிகள் ஆய்வு செய்து முத்திரையிடப்படாத 50க்கும் மேற்பட்ட தராசுகள் மற்றும் எடைக்கற்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 comment:

  1. KUPPAIKALAI AKATTRA NATAVADI ETUKKA EO IKU NEYRAM ILAIYAM SAB NEEINKA VERAY....... NALLA TV PARUNKA SAB

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.