Tuesday, May 24, 2011

கீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா? ஐகோர்ட் கிளை உத்தரவு



கீழக்கரை மே.25
கீழக்கரை அருகே நகராட்சி இடத்தில் ஐகோர்ட் உத்தரவின் பேரில் மறு ஆய்வு நடைபெற்றது. கீழக்கரை தோணிபாலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தனியாரால் தரப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட நகராட்சி முடிவு செய்தது. குப்பைகள் அங்கு கொட்டபட்டு வந்தது பின்னர் அப்பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன் சுற்றுப்புற சுவர் கட்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில் தில்லையேந்தல் ஊராட்சி துணை தலைவர் முத்து வேல் குப்பைகளை இங்கு கொட்ட அனுமதிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றார்.இதனால் சுற்று சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கீழக்கரை,தில்லையேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து இந்த பிரச்னையில் தீர்வு காண வேண்டும் குப்பை கொட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மறுபரீசலனை செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன அடிப்படையில் மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் தலைமையில் குழு ஒன்று நேற்று காலை திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் கீழக்கரை ,மற்றும் தில்லையேந்தல் பகுதியை சேர்ந்த குறிப்பிட்டவர்களை அழைத்து பேசி கருத்து கேட்டனர் .பின்னர் குப்பை கிடங்கு அமையவுள்ள இடதையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் கூறுகையில் , இரு தரப்பிலும் கருத்து கேட்டுள்ளோம் .குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்துள்ளோம் .ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்பிக்க உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.