


வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் வள்ளல் சீதக்காதி சாலையில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
படம்: நன்றி -நெய்னா
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி கோப்பையை கைப்பற்றியது.

கீழக்கரை மூர் விளையாட்டு கிளப்பின் நிர்வாகி ஹசனுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,
ராமநாதபுரம் காவல்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் வாலிபால் இறுதிப்போட்டியில் முகவை அணியை மூர் கிளப் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
அதே போல் கூடைப்பந்து போட்டியில் மூர் கிளப் இறுதி போட்டி வரை இடம் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற நமதூர் அணி வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் கீழக்கரையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
congratulations
ReplyDelete