Friday, June 29, 2012
கீழக்கரை கடற்கரையில் கலெக்டர்!கலெக்டரிடம் கமிஷனர் குறித்து நேரடி குற்றச்சாட்டு!
கீழக்கரை கடற்கரையில் கலெக்டர்!கலெக்டரிடம் கமிஷனர் குறித்து நேரடி குற்றச்சாட்டு!
கீழக்கரை பகுதிக்கு வருகை தந்த கலெக்டர் கடற்கரை பகுதிக்கு திடீர் விசிட் அடித்து சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.அவருடன் கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீப் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் வந்தனர்.
மக்கள் சேவை இயக்கம்,கே எம் எஸ் எஸ் சங்கத்தினர்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் அங்கு வந்திருந்தனர்.கலெக்டரிடம் மக்கள் சேவை இயக்கத்தின் முஜீப், நகராட்சி நிர்வாகம் குறித்து நேரடியாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மக்கள் சேவை இயக்கம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இன்று கலெக்டரை சந்தித்த மக்கள் சேவை இயக்க நிறுவனர் முஜீப் ,
கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீப் ரஹ்மானின் செயல்பாடு சரியில்லை என்றும், நகர் குறித்து எந்த புகார் அளித்தாலும் கமிஷனர் சொல்கிறார்..."அதெல்லாம் ஒன்று செய்ய முடியாது கீழக்கரையில் இப்படித்தான் இருக்கும் எங்கு போய் வேண்டும் என்றாலும் புகார் செய்து கொள்ளுங்கள்" என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்.எனவே கீழக்கரைக்கு வேறு ஒரு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்.மேலும் நகராட்சியின் சுகாதார நடவடிக்கை சரியில்லை என்று புகார் அளித்ததோடு மேலும் பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து பதிலளித்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.