சதக் கல்லூரியில் அமைச்சர்கள்
கீழக்கரை மற்றும் ஏர்வாடி தர்ஹாவுக்கு வருகை தந்த அமைச்சர்கள் சுந்தராஜன் மற்றும் அமைச்சர் முகம்மது ஜான் ஆகியோர் பல் வேறு இடங்களுக்கு சென்று கலந்தாய்வு செய்தனர்.
கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்டோர் அமைச்சர்களை சந்தித்து வரவேற்றனர்.
கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி,கடற்கரை பள்ளி,மேலத்தெரு புதுபள்ளி,அரூசியா தைக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
அவருடன் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம், பாவா செய்யது கருனை முன்னாள் நகர செயலாளர் இம்பாலா ஹீசைன்,உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
மேலும் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடபெறும் கல்லூரிகளுக்கு சென்ற அமைச்சர்கள் கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துலா,மற்றும் கல்லூரி முதல்வர்கள் அலாவுதீன்,முகம்மது ஜகாபர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதே போல் ஏர்வாடி தர்காவிற்கு சென்ற அமைச்சர்களிடம் ஹக்தார் நிர்வாகிகள் ஏர்வாடி தர்காவில் மன நல காப்பகம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் முகம்மது ஜான் அளித்த பேட்டியில்,
கடந்தாண்டு பள்ளிவாசல்கள் புனரமைப்பதற்கு முதல்வர் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு கடந்தாண்டு 28 விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தாண்டு மேலும் 26 விடுதிகள் புதிதாக கட்டப்படவுள்ளன. கடந்தாண்டு சிறுபான்மையினருக்கு மூன்று விடுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், இந்தாண்டும் ஒதுக்கப்படும். கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு நினைவிடம் உள்ளது. நினைவு மண்டபம் கட்ட, முதல்வரிடம் வலியுறுத்துவேன், என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.