நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மெத்தனமாக இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரியும், 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகீம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை நகரின் பல இடங்களில் தமிழகத்தை உலுக்க்கி வரும் டெங்கு பரவுகிறது.நமதூரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் சிலருக்கு காய்ச்சல் தீவிரமாகி மதுரை மருத்துவமானையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும்,சுகாதாரத்துறையும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்குறிய நடவடிக்கைகளை முடுக்கி விடாமல் மெத்தனம் காட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் மற்று சுகாதாரத்துறை இணைந்து நகர்மன்றத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாக நகர்மன்ற பிரதிநிதிகள்,பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை பெறப்பட்டது.குறிப்பாக பழுது அடைந்து இருக்கும் கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரத்தை இது வரை சரி செய்யாமலும்,கூடுதல் புகை மருந்து அடிக்கும் இயந்திரம் நகராட்சி சார்பாக வாங்குவதில் இது வரை மெத்தனம் காட்டி வருகிறது.
எனவே நகரில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சி நிர்வாகத்துக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்டபோது ,
நகரின் பல்வேறு இடங்களில் சுகாதாரம் பேணுவதற்கும்,டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே இவரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை.ஏதாவது புகார் சொல்ல வேண்டும் என்பதற்காக
இது போன்ற புகார்களை அவர் தெரிவித்து வருகிறார்.
.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.