Monday, June 25, 2012

கீழ‌க்க‌ரை புதிய‌ க‌ட‌ல்பால‌த்தில் அமைச்ச‌ர்க‌ள்!பூங்கா அமைக்க‌ கோரிக்கை !


கீழக்கரைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறை சுந்தர்ராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை த்ந்தனர்.

கீழக்கரையில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஜெட்டி பாலத்தை ஆய்வு செய்தனர்.(புதிய பாலத்தில் பழுது தொடர்பானகீழக்கரை டைம்ஸில் சில மாதங்களுக்கு முன் வெளி வந்த‌ செய்தி :- http://keelakaraitimes.blogspot.com/2012/04/blog-post_27.html )


மேலும் அமைச்சர்களை கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்க செயலாளர் இஸ்மாயில் தலைமையில் தலைவர் ஜமால் முன்னிலையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் ,
புதிய ஜெட்டி பாலம் அருகில் அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன அவ்விடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும், கடற்கரையில் நகராட்சி மூலமாக குப்பைகள் கொட்டப்பட்டு மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.உடனடியாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரும்,மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ2000த்தை உயர்த்தி அதிகமாக்கி தர வேண்டும் என்றும் பல் வேறு கோரிகைகளை மனுவாக அளித்தனர்.

இது குறித்து ப‌தில‌ளித்த‌ அமைச்ச‌ர்க‌ள் ,அனைத்து கோரிக்கைக‌ளையும் முத‌ல்வ‌ரின் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்ற‌ முய‌ற்சி மேற்கொள்வேன் என்ற‌ன‌ர்.

அமைச்ச‌ர்க‌ளுடன் கலெக்டர் நந்தகுமார், அதிமுக‌ மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆனிமுத்து, கீழக்கரை ந‌க‌ராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் உட‌ன் சென்ற‌ன‌ர்.

2 comments:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 25, 2012 at 8:39 PM

  கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் பெரு மக்களை சந்தித்து கடற்கரையில் பூங்கா அமைப்பது சம்பந்தமாக மனு அளித்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்றாகும்.

  அதற்கு முன்பாக அப்பகுதியை (ஐந்து வாசல் கிட்டக்கி முன்பாக உள்ள பாதையில் உள்ள காட்டு கரு வேல மரக்கிளைகள் உட்பட நீக்கி) சுத்தம் செய்து ஒளி மயமாக்கப்பட வேண்டும்.

  கடலடிக்கு அருகில் உள்ள பெரிய காட்டு கரு வேல மரத்தை நீக்கக் கூடாது. அது நல்ல நிழல் தரும் மரமாக உள்ளது. ஆனால் அதன் முன் பகுதியை சுத்தம் செய்து கடல் மண் போட்டு , மக்கள் அமர்ந்து கடற் காற்றை அணுபவிக்க சில கருங்கல் பெஞ்சுகளை அமைத்திட வேண்டும்.

  இதை மனது வைத்தால் நாளயே நகரின் மூத்த குடிமகள் நிறைவேற்ற முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இதற்கு அப்பகுதியை சார்ந்த பழைய குத்பாப் பள்ளி ஜமாத்தை சார்ந்த ஐந்து மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

  ReplyDelete
 2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 25, 2012 at 9:08 PM

  அமைச்சர் பெரு மக்களிடம் பூஙகா அமைக்க மனு கொடுத்தத்தோடு நம் பணி முடிந்து விட்டது என இருந்து விடாமல் கீ.ந.ம.வி.ந.மு.சங்கத்தினர் உள்ளூரில் இருக்கும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து தங்கள் எண்ணம், முயற்சியை நிறைவேற்றிக் கொள்ள நல்வாழ்த்துகள்.

  இது சம்பந்தமகாக 16/06/12 தேதிய கீழக்கரை டைம்சில் கீழக்கரையில் ஐந்து இடங்களில் புதிய சோடியம் விளக்குகள், நகராட்சி முடிவு என்ற தலைப்பில் எமது கருத்தை பதிவும் செய்துள்ளோம்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.