கீழக்கரையில் ஏராளமான வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில் பெர்மிட் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்கபடுவது,பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன.பலரும் ராமநாதபுரம் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் கீழக்கரை முக்குரோட்டில் நடத்திய வாகன சாதனையில் சட்டவிரோதமாக இயக்கப்பட்டதாக 6 ஆட்டோக்களும்,ஒரு மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
விதி மீறியவர்களுக்கு ரூ2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ஒரு குழு மட்டுமே சோதனைக்கு வருவதால் நகர் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த முடிவதில்லை.இதனால் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவது கிடையாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.