Tuesday, June 19, 2012
கீழக்கரையில் சி.எஸ்.ஐ. பள்ளி அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு !!
கீழக்கரை வடக்குதெரு தெரு பகுதியில் கழிவு நீர் வாய்கால் கட்டுவதற்கு நகராட்சி மூலம் ரூ 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் சிமெண்ட் கால்வாய்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர்,கீழக்கரை நகராட்சி தலைவர்,கமிஷனர்,பள்ளி கல்வித்துறை இயக்குநர்,ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அம்மனுவில்,
இப்பகுதியில் சி.எஸ்.ஐ.தூய பேதுரு ஆலயமும்
அதன் வளாகத்தினுள் 200 ஆண்டுகளுக்கு பழமையான சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளியும் உள்ளது இந்த இடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களும்,பள்ளி வரும் மாணவ,மாணவியரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
மேலும் ஆலயத்தின் சுற்று சுவரை ஒட்டி கால்வாய் அமைமப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலை உள்ளது.
மேலும் பள்ளம் தோண்டும் பகுதியில் குடிநீர் பைப் புதைக்கப்பட்டுள்ளது.இதனால் கழிவுநீர் குடிநீருடன் கலப்பதற்கு வாய்ப்புள்ளது.பள்ளமான பகுதியாக இருப்பதால் இங்கிருந்து கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்பில்லை.எனவே மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சபையின் குரு தேவாதாஸ் ராஜன் பாபு மனுவில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.