இலங்கை தலைநகரம் கொழும்பில் கீழக்கரை பகுதி உணவுகள் கிடைக்கும் வகையில் 'ஸ்பைஸி' என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டு கீழக்கரையை சேர்ந்த சித்தீக் அவர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
கொழும்பின் முக்கிய வீதியான பிரிண்ஸ் தெருவில் திறக்கப்பட்டுள்ள இக்கடையின் நிர்வாகி சித்தீக் கூறுகையில்,
கொழும்பில் நமதூர் ருசிக்கு ஏற்றவாறு உள்ள உணவு விடுதிகள் இங்கு மிகவும் அரிதாக இருந்து வந்தது அந்த அடிப்படையில் கீழக்கரை பகுதி வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் ருசி இங்கு கிடைக்குமாறு உணவுகள் நம் கடையில் தயார் செய்யப்படுகிறது.
அல்லாஹ்வின் கிருபையால் கடை ஆரம்பித்த குறைந்த காலத்தில் ஏராளமானோர் நம் கடையின் உணவை விரும்பி உணவருந்த இங்கு வருகை தருகிறார்கள். வியாபரம் செய்து லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமில்லாமல் நம் ஊரை விட்டு பிரிந்து வந்துள்ள நம் மக்களுக்கு நமதூர் வகை உணவுகளை கொடுப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது .கொழும்பு வரும் நம் மக்கள் எங்களின் கடைக்கு ஒருமுறை வந்து செல்ல வேண்டும் என்றார்.
பல்வேறு நாடுகளில் பரவி கிடக்கும் நமதூர் மக்களின் சுய தொழில்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற தொகுப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.உங்களின் கட்டுரைகளைkee keelakaraitimes@yahoo.com ல் அனுப்பி தரலாம்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.