Sunday, June 17, 2012

தொடரும் வெற்றி !கீழக்கரை மூர் அணி சாதனை ! மாநில அளவிலான போட்டிக்கு தகுதி !




தமிழக‌ முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், வாலிபால் , கூடைப்பந்து பல் வேறு போட்டிகள் நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சேதுபதி -சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விளையாட்டு அணிகள் கலந்து கொண்டனர்.

இங்கு நடைபெற்ற‌ வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக‌ அவ்வணியின் நிர்வாகி ஹசனுதீன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் ஹசனுதீன் கூறியதாவது,

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் மூர் விளையாட்டு அணி நமதூர் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டு இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று வாலிபால் மற்றும் கூடைப்பந்து விளையாட்டில் நமதூர் இளைஞர்கள் மாநில அளவில் பேசப்படும் வீரர்களாக உருவாகியுள்ளனர்.
இந்த இரண்டு மாத கால் இடைவெளியில் மூன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளிகளில் கோப்பையை வென்றுள்ளோம்.
நமது அணி வீரர்கள் மக்களாகிய‌ உங்கள் அனைவரின் ஆதரவுடனும்,வாழ்த்துக்களுடன் மாநில அளவில் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கையுட உள்ளோம்.எல்லா புகழு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே என்றார்..

சமீபத்தில் மாவட்ட அளவிலான போட்டியில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.

2 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 17, 2012 at 6:47 PM

    தம்பி அசனுதீன் அவர் தன் தந்தை வழியில் நின்று சிறப்பாக செயல்படுகிறர் என்பதை நகர் மக்கள் அனைவரும் மன நிறையோடு நன்கு அறிவர்.

    60 களின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஜனாப். எம்.எம். சம்சுதீன் அவர்கள் திறைமையான கை பந்து விளையாட்டு வீரர். அன்றைய ஹமீதியா ஆண்கள் உயர்நிலை பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியர் திரு. சாமித்துரையின் செல்லப்பிள்ளை.

    தந்தையின் பெயர் காக்கும் தனையனாக தம்பி அசனுதீன் அவர்களும் தன் சுய முயற்சியால் நகரில் மூர் அணியை தோற்றுவித்து இன்று வரை தளர்ச்சி இல்லாது வருடாவருடம் மேம்படுத்தி வெற்றி கோப்பைகளை அள்ளி வருகிறார்.தன்னை சார்ந்த அணியையும் கட்டுக்கோப்பாக கட்டி காத்து வெற்றி கோப்பைகளை அள்ளி வருகிறார். இதற்கு நிச்சயமாக வல்ல இறைவனின் அருளாசி கிடைக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    அவரது மூர் அணி இன்னும் பல களம் கண்டு வெற்றி காண இறைவனின் அருளாசிக்காக பிரார்த்தின்றோம்.மனமுவந்து வாழ்த்த்கிறோம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.