Wednesday, June 13, 2012
எக்ஸ்னோரா இணைந்து கீழக்கரை பள்ளிகளில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கீழக்கரையில் சுற்று சூழல் குறித்து அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதற்கு தொண்டு நிறுவனமான வெல்பேர் அசோசியேசன் மற்றும் எக்ஸ்னோரா தொடடு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்த முடிவெடுத்ததின் பேரில்,
தொடக்கமாக கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஞானகலாவதி தலைமையில் நடைபெற்றது. வெல்பேர் அசோசியேசன் மேலாளர் அப்துல் அஜீஸ்,எக்ஸ்னோரா அமைப்பின் மக்கும் குப்பை மக்காத குப்பை தயாரிப்பு மேலாளர் தணிகாசெல்வம் முன்னிலை வகித்தனர்.
இது க்குறித்து எக்ஸ்னோரா தொழில்நுட்ப மேலாளர் தணிகாச்சலம் பேசுகையில்,
,
கீழக்கரையில் மக்கும் குப்பை ,மக்காத குப்பைகளை பிரித்து போடுவதற்கு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தொடக்க முயற்சியாக மேலத்தெரு மற்று அதன் சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளில் சலுகை விலையில் வீட்டுக்கு இரண்டு வாளிகள் வீதம் சுமார் 1500 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு மக்கும்குப்பை,மக்காத குப்பை என்று பிரித்தெடுக்க்ப்படுகிறது.இவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இது குறித்து கீழக்கரை மக்கள் அனைவரும் ஒத்துழைத்து கீழக்கரை நகரை சுகாதாரமான நகராக்குவோம் இவ்வாறு பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.