
கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் 60அடி உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் கீழக்கரை புது பஸ் நிலையம் தெற்குத் தெரு கட்டாலிம்ஷா பங்களா அருகில், பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில் உள்ளிட்ட 5 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கோபுரம் மின்விளக்குகள் அமையவிருக்கும் இடங்களை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா நேரில் சென்று பார்வையிட்டார்.
சந்தோஷமான விஷயம். முயற்சி எடுத்த நகரின் முதல் குடிமகள் மற்றும் அனைத்து மககள் பிரதிகளுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஇந்த இனிய தருணத்தில் அடியேனின் அன்பான வேண்டுகோள்.
நகரில் பகலில் மட்டும் அல்லாது நடு இரவிலும் கூட கூடுதலாக கடந்து செல்லும் வீதியான, மிகவும் பழைமையான முக்கிய தடம் முஸ்லீம் பஜார். நீர் மாலை கிணறுக்கு அருகில் ஒன்று அமையப் பெற்றால் நகரின் அழகு மிளிரக்கூடும்.
அடுத்ததாக நகரில் பொழுது போக்கு அம்சங்கள் அரிதாக இருப்பதால் கடற்கரையில் புதிய கடல் பாலம் கட்டிய பின் தற்சமயம் திரளான மக்கள் அங்கு சென்று இயற்கையை கண்டு களித்து அனுபவித்து வருவது கண் கூடான ஒன்று. இரவு நேரத்திலும் அனுபவிக்கும் முகமாக அந்த இடம் முழுவதும் பிரகாசமாக ஆக்கப்பட வேண்டும். எனவே அங்கு ஒரு ஹைமாஸ் கம்பம் அமையுமானால் மக்கள் மனதார நன்றி கூறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.
செய்வீர்களா? மக்கள் எதிர் பார்க்கிறோம்.
இத்துடன் நகரில் ஏற்கனவே உள்ள அனைத்து ஹைமாஸ் கம்பங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிய நட்வடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.