கீழக்கரையில் "கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற பொது நல இயக்கம் தொடங்கபட்டு அதன் நிறுவனராக முஜீப் உள்ளார்.
இந்த அமைப்பின் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகங்கள் வழங்கப்பட்டது.மேலும் ஒரு சிலருக்கு தலா ரூ5000 ரொக்கம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.
இந்நிகழச்சியில் மூர் ஹசனுதீன்,சீனி,எஸ்.டி.பி.ஐ பிரமுகர் அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து இயக்கத்தின் நிறுவனர் முஜீப் கூறுகையில்,
கீழக்கரை பலரும் மக்கள் நலப்பணிகளை மேறுகொண்டு வருகிறார்கள் அந்தவகையில் நாமும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பொது நல பணிகளை நடத்தி வருகிறோம். ஏராளமான இளைஞர்கள் இந்த சேவை இயக்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி ஆர்வத்துடன் தங்களையும் இணைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்ஷா அல்லா தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் நகரின் நலனுக்காக பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவ்ர்களின் இந்த சேவைக்கு இதயம் கனிந்த பாரட்டுகள்.
ReplyDeleteஇதே அமைப்பினர், கல்வி உதவித் தொகையாக பல திட்டங்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகள் வழங்குவதை நமது நகரின் மாணவமணிகளுக்கு கிடைக்க உதவி செய்யலாமே.
செயல்பட முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம்