Wednesday, June 13, 2012

கீழக்கரையில் 5நாட்கள் மட்டுமே கட் அவுட் மற்றும் விளம்பர‌ பலகைகளுக்கு அனுமதி !


பைல் (பழைய) படம் கீழக்கரையில் கடந்த தேர்தலின் போது அகற்றப்பட்ட விளம்பர பதாகைகள்

கீழக்கரை காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் , நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், கீழக்கரை நகரின் பல்வேறு தரப்பினர
கலந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துகளும் பபரிசீலிக்கப்பட்டு கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது

கீழக்கரையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினரால் நடத்தப்படும் பொதுகூட்டங்கள் புதிய பேருந்து நிலையம் அருகே மட்டும்தான் நடத்தி கொள்ள வேண்டும் வேறு எங்கும் நடைபெறகூடாது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மணிக்கணக்கில் பொதுக்கூட்டம் போல் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் பிரசாரம் செய்யலாம். விதி மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும்

கீழக்கரை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ்போர்டுகள், விளம்பர தட்டிகள் வைப்பது தடை செய்யப்படுவதாகவும்.விளம்பர பலகைகளை நிறுவ‌ விரும்புவோர் நகராட்சியிடம் அனுமதிபெற்ற பிறகே நிறுவ‌ வேண்டும். அவ்வாறு அனுமதிபெற்ற பின் வைக்கப்படும் போர்டுகள் 5 நாட்களுக்குள் அகற்றப்பட்டுவிட வேண்டும். அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ்போர்டுகளையும் உடனடியாக அகற்றி கொள்ளவேண்டும்.

அகற்றப்படாவிட்டால் நகராட்சி மூலம் அவை அப்புறப்படுத்தப்படுவதுடன், அதற்கான செலவுத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.