Saturday, June 30, 2012
காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் கவுன்சிலர்கள்!கவுன்சிலர் ஹாஜா குற்றச்சாட்டு
கீழக்கரை வடக்குதெரு தெரு பகுதியில் கழிவு நீர் வாய்கால் கட்டுவதற்கு நகராட்சி மூலம் ரூ 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் சிமெண்ட் கால்வாய்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.வடக்குதெரு பகுதியில் பள்ளம் தோண்டும் பகுதியில் குடிநீர் பைப் புதைக்கப்பட்டுள்ளது.இதனால் கழிவுநீர் குடிநீருடன் கலப்பதற்கு வாய்ப்புள்ளது.பள்ளமான பகுதியாக இருப்பதால் இங்கிருந்து கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்பில்லை.எனவே மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பணிகள் நிறுத்தப்பட்டு தோண்டிய குழிகள் மூடப்படுவதாக கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா கூறுகையில் ,
எனது வார்டான இப்பகுதியில் தேவையில்லாமல் கால்வாய் அமைக்கும் நடைபெற்றது.இப்பகுதி மக்கள் யாரும் விரும்பவில்லை ஏன் என்றால் தாழ்வான பகுதி என்பதால் கழிவுநீர் நிச்சயம் வெளியேற வாய்ப்பில்லை.
தற்போது தோண்டிய குழிகள் மூடப்பட்டு வருகிறது.மக்களி வரி பணம் வீண் விரையமானதுதான் மிச்சம்.பணிகள் துவங்கப்படுவதற்கு முன்பே முறையாக திட்டமிடல் வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட சில கவுன்சிலர்கள் பணி எடுத்திருக்கும் ஒப்பந்தராரகளிடம் வற்புறுத்தி கமிஷன் கேட்பதாகவும் கமிஷனுக்காக மட்டும் தினமும் பலமுறை போன் செய்வதாகவும், ஒப்பந்தந்தாரர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.தங்கள் வார்டுக்கான பணிகளை நன்றாக செய்ய வேண்டும் என்ற வலியுறுத்த வேண்டிய கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டால் எப்படி பணிகள் ஒழுங்காக நடைபெறும் மேலும் கமிஷன் கேட்ட கவுன்சிலர்கள் யார்,யார் என்று ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவேன்.பணிகளுக்கான பணம் மக்கள் பணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.இனியாவது திருந்த வேண்டும்.என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.